மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இடைவிடாது பெய்ந்து வந்த மழையினால், தண்ணீரில் சென்னை தத்தளித்து வந்தது, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் பெய்ந்துள்ள மழையின் காரணமாக சென்னை எப்படி தப்பிக்க போகிறத என்கிற அச்சம் ஒரு பக்கம் இருக்க, இந்த மீட்பு பணியை எப்படி செய்ய போகிறது ஆளும் அரசு என்கிற சவாலும் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் பலர் களத்தில் அதிரடியாக இறக்கிவிடப்பட்டனர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பம்பரமாக சுற்ற, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நேரில் சென்று பார்வையிடடு, அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக மக்கள் தாக்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பணிகள் கொடுக்கப்பட்ட நிலையில், தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா சமூக வலைதளத்தில், உதவி கோரி வரும் கோரிக்கைகளை விசாரித்து, அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய பணிகளை ஒருங்கிணைத்து வந்து கொண்டிருக்கிறார். தண்ணீர் சூழ்ந்துள்ள வீட்டில் இருக்கும் வயதானவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது என சமூக வலைத்தளத்தில் மூலம் வரும் கோரிக்கைகளில் ஒருங்கிணைத்து பூர்த்தி செய்து வருகிறார் அமைச்சர் டி ஆர் பி ராஜா.
இந்த நிலையில் சென்னையில் தி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நீர் சூழ்ந்துள்ளதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த தி நகர் பகுதியில் 5 மாத குழந்தைக்கு கொடுக்க பால் பவுடர் இல்லை, சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளதால், வெளியில் சென்று பால் பவுடர் வாங்க முடியாத சூழலில் தவித்து வருவதால், அந்த 5 மாத குழந்தைக்கு யாராவது உதவி செய்ய வேண்டும் என பெண் ஒருவர் சமூக வலைத்தளம் வாயிலாக உதவி கோரினார்.
இதையடுத்து, இந்த விஷயம் அமைச்சர் டிஆர்பி ராஜா பார்வையில் பட உடனே, அந்த 5 மாத குழந்தை இருக்கும் இடம் குறித்து முழு விவரம் அனுப்புமாறு கேட்டு கொண்டவர், மேலும் வேறு ஏதேனும் பொருட்கள் வேண்டுமா எனக் கேட்டார். உடனே அடுத்த சில மணி நேரத்தில் அந்த 5 மாத குழந்தைக்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சமூக வலைதளத்தில் உதவி கோரிய பெண் அமைச்சர் சொன்னபடி, குழந்தைக்கு பால் சென்று சேர்ந்துவிட்டதாகக் கூறி, அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.
இது போன்று தொடர்ச்சியாக, உதவி கோரி பதிவிடும் நபர்களிடம் விசாரித்து, அவர்களுக்கு உதவும் பணிகளை ஒருங்கிணைத்து செய்து வருகிறார் அமைச்சர் டிஆர் பி ராஜா. இதே போன்று மின்சார ஊழியர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகள் என இடைவிடாமல் பணியாற்றிய வருவது பாராட்டு தக்க வகையில் இருக்கிறது.
அதே நேரத்தில் மிகப்பெரிய பேரழிவிலிருந்து சென்னை தப்பியிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அரசு இயந்திரங்கள் செயல்படுவதை பார்க்க முடிகிறது. கடந்த காலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, உணவு பொட்டலங்களுக்காக மொட்டை மாடியில் மக்கள் இருக்க வேண்டிய நிலை தற்பொழுது இல்லை, அந்த வகையில் அரசு உயர் அதிகாரிகள் தொடங்கி சாதாரண ஊழியர் வரை இரவு பகல் பாராமல் வெள்ளத்தில் இருந்து சென்னையை மீட்டெடுக்கும் பணியை சிறப்பாக செய்து வருவது பாராட்டும் வகையில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.