சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்முறையாக ஒரு பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கபப்டுகிறது. இந்த நிகழ்வு முதல்முறை என்பதால் பெண்கள் தங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண்களின் சதவிகிதம் குறைவாகவேன் இருந்துவந்தது. தற்போது பதிவாளர் முதல் தபேதார் வரை பெண்களை நியமித்திருப்பதால் பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2007ல் மாவட்ட நீதிபதிகள் பிரிவில் இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும் செங்கோல் ஏந்திச்செல்லும் பணிக்கு இதுவரை ஆண்கள் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டு வந்தனர். நீதிபதிகள் நீதிமன்றத்திற்குள் வருகையில் கையில் செங்கோலுடன் நீதிபதிகளுக்கு முன்னால் நடந்துவருவதே தபேதாரின் பணி. பிரிட்டிஷார் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைமுறை தற்போது வரை தொடர்கிறது.
அதேபோல நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதிகள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு முன்னால் செங்கோலுடன் தேபேதார்கள் செல்வர். இந்த பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை. சென்ற வருடம் மார்ச் மதம் உயர்நீதிமன்றம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் தபேதார் 40 பேர், அலுவலக உதவியாளர்கள் 310 பேர் மாற்றம் சமையல்காரர், வாட்ச்மேன் நூலக உதவியாளர் என பல பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
மேற்சொன்ன பணிகளில் சேருவோருக்கு மாதாந்திர சம்பளமாக 15000 ரூபாயிலிருந்து 50000 ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கான வயதுவரம்பு 18 முதல் 30 வரை ஆகும். இதற்கான கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்து தேர்வுகள் மூலம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தபேதாருக்கு வெண்ணிற சுடிதார் சீருடையாக வழங்கப்படும். மேலும் வழக்கபோல இடுப்பிற்கு பட்டையும் தலைக்கு தலைப்பாகையும் வழங்கப்படும்.