பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திடீர் கைது..! காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி அருகே இடும்பன்குளம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு வந்த பிஜேபி தலைவர் ஹெச்.ராஜா திடீரென கைதுசெய்யப்பட்டார். மேலும் எந்தவித காரணமும் சொல்லாமல் தன்னை கைதுசெய்தது கணடனத்துக்குரியது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பழனியில் உள்ள இடும்பன் கோவில் குளக்கரையில் மஹா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு இந்து ஆலய பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு அழைப்பாளர்களாக ஹெச்.ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனிடையே நேற்று மதியம் மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை காவல்துறை லைத்திருந்தது.

உரிய துறையில் அனுமதி வாங்கவில்லை என்றும் நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் உட்பட முந்நூற்றிற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுவதால் போதிய இடவசதி இல்லையென்றும் கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடந்துவந்துகொண்டிருந்த ஹெச்.ராஜாவை சத்திரப்பட்டி அருகே போலீஸ் கைதுசெய்தது.

போலீசாரிடம் விளக்கம் கேட்ட ஹெச்.ராஜாவுக்கு காவல்துறை பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே தனியார் செய்திநிறுவனத்திற்கு போனில் பேசிய ஹெச்.ராஜா “நான் ஹிந்து மதத்தில் பிறந்தது தவறா. ஹிந்து மதத்தில் மலைகளையும் குளங்களையும் ஆறுகளையும் வழிபட சாஸ்திரங்கள் கூறியிருக்கிறது.

நெய்க்காரன்பட்டியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் கேள்வியெழுப்ப கூடாது என்பதற்காகவே காவல்துறை என்னை கைதுசெய்துள்ளது. காரணம் சொல்லாமல் கைதுசெய்த திண்டுக்கல் காவல்துறையினருக்கு எதிராக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என அந்த செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா கைதை தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் பழனியில் பதட்டம் நிலவிவருகிறது.