விஷம் அருந்திய அகோரி கலையரசன்… பழனி மருத்துவமனையில் சிகிச்சை… எதற்கு இந்த முடிவை எடுத்தார் தெரியுமா.?

0
Follow on Google News

தற்பொழுது ட்ரென்டிங் சாமியாராக இருக்கும் அகோரி கலையரசன் பற்றிய பின்னணி குறித்து பல தகவல்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டே உள்ளது, இவர் ஒரு டுபாக்கூர் அகோரி என்று ஒரு தரப்பினர் தெரிவிக்க, நான் உண்மையிலே அகோரி தான், காளியிடம் வரம் வாங்கி வந்துள்ளேன் என விளக்கம் கொடுத்து வருகிறார் அகோரி கலையரசன். இந்நிலையில் பல சேனல்களும் அகோரி கலையரசனை போட்டி போட்டு பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்து வருகிறது.

இந்நிலையில் பள்ளி பருவத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து வந்ததாக பேட்டி ஒன்றில் பேசிய அகோரி கலையரசன், சிறு வயதில் இருந்து நாட்டுப்புற கலைகளில் மிகவும் கற்றுத் தேர்ந்த நான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது சின்ன சின்ன கலை நிகழ்ச்சிக்கு செல்வேன். அதனால் எனக்கு ஒரு நிகழ்ச்சிக்கு 300 ரூபாய் கிடைக்கும். அதன் பின்பு ஆதரவற்ற ஆசிரமத்தில் இருந்த நான், கலைநிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் காரணமாக என்னுடன் படிக்கும் பசங்களோடு இணைந்து தனியாக ரூம் எடுத்து தங்க ஆரம்பித்தோம்.

நான் பள்ளியில் படிக்கும் பொழுது நான்தான் பள்ளியின் லீடர் என்பதால் ஏதாவது ஒரு மாணவன் சிகரெட் குடித்தால் அதை P.T வாத்தியாரிடம் போட்டு விடுவேன், ஒருவேளை அவன் தம் அடித்ததை நான் P.T வாத்தியாரிடம் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு அஞ்சு ரூபா கொடுக்க வேண்டும் என்று அவனிடம் கேட்டு ஐந்து ரூபாயை பெற்றுக் கொள்வேன். அந்த ஐந்து ரூபாய் எனக்கு அன்றைக்கு ஸ்நாக்ஸ் மற்றும் வடை வாங்கி சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் நான் தங்கி இருந்த அறையில் சக மாணவர்கள் தம் அடிப்பது எனக்கு பிடிக்கவில்லை, அதனால் அந்த அறையில் இருந்து வெளியேறினேன். அப்போது போடியில் உள்ள ஓம் சக்தி பீடம் கோவிலை என்னிடம் ஒப்படைக்கிறார்கள். நான் அந்த ஓம் சக்தி கோவில் பீடத்தில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தேன். நான் அந்த கோவிலிலே தங்கி விட்டு இரவெல்லாம் சாமிக்கு அபிஷேகம் செய்வது, அலங்காரம் செய்வது சாமியிடம் பேசுவது, என சாமியை கவனித்து, அம்மன் சாமிக்கு சேலை கட்டி விடுவது என சேவை செய்தேன்.

அதிகாலை அம்மனுக்கு தீபாதாரணை காட்டிவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்வேன். மேலும் எனக்கு அந்த கோவிலில் உதவிக்கு ஆட்கள் தேவை வேண்டும் என்பதால், என்னுடன் படித்த ஒரு ஐந்து பசங்களை மூளை சலவை செய்து, அதாவது நீ அம்மனுக்கு தொண்டு செய்தால், பத்தாம் வகுப்பு பாஸ் ஆகி விடுவாய், நான் உனக்காக அம்மனிடம் கேரண்டியாக வரம் வாங்கி தருகிறேன் என்று சொல்லி என்னிடம் சில பசங்களை மூளைச்சலவை செய்து வைத்துக் கொள்வேன் என தெரிவித்துள்ள கலையரசன்.

மேலும் தொடர்ந்து பேசியவர், 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கிறேன் நான் அம்மாவிடம் என்னை கோவையில் உள்ள இந்த கல்லூரியில் தான் என்னை சேர்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறேன், ஆனால் என் குடும்பத்தில் வசதியை பொருத்தவரை எனக்கு அந்த கல்லூரியில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து விட்டார்கள். ஏனென்றால் அந்த கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு 40 இருந்து 50 ஆயிரம் செலவாகும்.

ஆனால் என்னுடைய தாய் வருடம் முழுவதும் சம்பாதித்தால் கூட அந்த தொகையை சம்பாதிக்க முடியாது. அதனால் 6 மதத்துக்கு ஒரு முறை 50 ஆயிரம் கட்டணம் கட்ட முடியாது என்று, என்னுடைய அம்மா அந்த கல்லூரியில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துவிட்டார், உடனே நான் விஷத்தை குடித்து விட்டேன் மிகவும் சீரியசான கண்டிஷனில் பழனியில் உள்ள மருத்துவமனையில் என்னை அனுமதித்தார்கள்.

அப்போது ஏதோ பண்ணி தொலை என்று கடனை வாங்கியாவது உன்னை அந்த கல்லூரியில் சேர்த்துகிறேன் என்று நான் விரும்பிய அந்த கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் என்னை சேர்த்து விட்டார்கள், அதன் பின்பு நான் 19 வயதில் திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்த கலையரசன், பின்பு மும்பைக்கு சென்ற நான், அங்கிருந்து பாபா படத்தில் வருவது போன்று ஒரு சாமியார் தன் முன்னே தோன்றியதாகவும் அதன் பின்பு நான் காசிக்கு அழைத்து செல்ல பட்டேன்.

காசியிலே அகோரியாக மாறினேன் என தெரிவித்த கலையரசனுக்கு, மிக சிறிய வயதிலே மூன்று குழந்தைகள் உள்ளது, மேலும் கலையரசன் பேட்டிகளை ஒவ்வொன்றும் பார்க்கும் பொழுது, இவர் உண்மையிலே அகோரி தானா, அல்லது டூபாக்கூர் அகோரியா, இவர் குழம்பி போயுள்ளாரா.? அல்லது மக்களை குழப்புகிறாரா.? என குழப்பம் அடைய செய்துள்ளது.