நாள் முழுவதும் ஏசி ஓடினாலும் இனி கவலை வேண்டாம்.. இதை மட்டும் செய்தால் மின் கட்டணத்தை சேமிக்கலாம்..

0
Follow on Google News

கோடை காலம் துவங்கி, அடுத்து கத்திரி வெயில் காலமும் துவங்கி, மக்களை வெயில் தந்தூரி அடுப்பில் வைத்து வாட்டியெடுப்பது போல வதைத்துக் கொண்டிருக்கிறது. கோடை வெப்பத்தை சமாளிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை வீட்டில் இருப்பவர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் ஒருவர் வீட்டில் உள்ள பிரிட்ஜை ஏசியாக பயன்படுத்தியுள்ளார். அதாவது ஃப்ரிட்ஜை திறந்து வைத்து அதற்கு முன்னால் ஏர் கூலரை வைத்து அந்த நபர் நிம்மதியாக உறங்கும் வீடியோ இணையத்திலானது.

கோடை வெயில் காரணமாக புழுக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவித்து வரும் நிலையில் வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க இப்போது எல்லோருடைய வீட்டிலும் வழக்கத்திற்கு மாறாக மின்விசிறி மற்றும் மற்ற எலெக்ட்ரிக் சாதனங்களை முழுநேரம் மக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ‘ஏர் கண்டிஷன்’ வாங்குவோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஏர் கூலர்கள், டவர் ஃபேன்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக, ஏசி பயன்படுத்துவோரின் மின்கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. உண்மையை சொல்ல போனால், பல வீடுகளில் இப்போது சீலிங் ஃபேன் போல ஏசி தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகளவு மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மக்கள் பயன்படுத்த வேண்டிய மின்சார அளவை, மக்கள் கடந்த வாரமே எட்டிவிட்டனர் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஏசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் பயன்படுத்தப்படும் மின்சார அளவும் அதிகரித்துவிட்டது.

பல மக்கள், அவர்களுடைய ஏசியை 18°C இல் வைத்து இயக்குகிறார்கள். இது மின்சாரத்தை பல மடங்கு எடுத்துக்கொள்கிறது. இதனால் மின்சார கட்டணமும் பல ஆயிரங்கள் வரை உயர்கிறது என்று TANGEDGo கூறியுள்ளது. அதாவது ஒரு டன் திறன் உடைய ஏசி சாதனம், ஒரு மணி நேரம் இயங்கினால், 1 யூனிட் மின்சாரம் செலவாகிறது. இது, 1.50 டன் திறன் உடைய ஏசி சாதனத்தில், 1.50 யூனிட் செலவாகிறது.

பலரும் விரைவில் குளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஏசி சாதனத்தில், 18 ‘டிகிரி’ செல்ஷியசை பயன்படுத்துகின்றனர். வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரிப்பால், பலருக்கும் மின் கட்டணம் அதிகம் வரும். இந்த நிலையில் ஏசியும் பயன்படுத்த வேண்டும் அதே நேரத்தில் மின்கட்டணத்தையும் சேமிக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள யோசனைகளை பின்பற்ற வேண்டும்.

வீடு அல்லது அலுவலகத்தில் இருக்கின்ற ஏசியை 24-26 டிகிரி செல்சியஸில் செட் செய்து வைப்பதன் மூலம் 36 சதவீத மின் கட்டணத்தை சேமிக்க முடியும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் சில டிப்ஸ் தருகிறார்கள். ஏசி காற்று நேரடியாக குழந்தையின் மேல் படும்படி படுக்க வைக்கக் கூடாது. ஏசியின் டெம்பரேச்சர் 24 – 28 டிகிரி வரை வைக்க வேண்டும். 24 டிகிரிக்கு கீழ் வைத்தால் ஹைபோ தெரபி போன்ற பல பிரச்சனைகள் வர இருக்கிறது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.