கத்துவட்டிக்கு விட்ட பெண் கொடுமையால் காவலர் தற்கொலை…! போலீசாருக்கே இந்த நிலைமையா.?

0
Follow on Google News

கடலூர் : தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டி கொடுமை தலைதூக்கிவருவது அனைவரையும் கவலையடையச்செய்துள்ளது. மேலும் கடந்த சிலமாதங்களாக கந்துவட்டி கொடுமையால் சிலர் இறந்தது தமிழகத்தையே உலுக்கியிருந்த நிலையில் ஒரு காவலரே கந்துவட்டி கொடுமையால் இறந்திருப்பது பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.

உளுந்தூர்பேட்டை 10 ஆவது பட்டாலியனில் போலீசாக பணிபுரிந்தவர் புவனகிரியை அடுத்து உள்ள துறிஞ்சிகொல்லயை சேர்ந்த செல்வகுமார். ஜூன் 1 அன்று கடலூர் வந்த செல்வகுமார் நீதிமன்றம் அருகே வருகையில் திடீரென மயங்கிவிழுந்தார். தகவலறிந்த புதுநகர் காவல்துறையினர் செல்வகுமாரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பின்னர் செல்வகுமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அவர் விஷமருந்தியது தெரியவந்தது. தனது குடும்ப செலவிற்காக அனிதா என்பவரிடம் செல்வகுமார் ஐந்துலட்சம் கடன் வாங்கியுள்ளார். சில நாட்களிலேயே அதை வட்டியுடன் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் செல்வகுமார் கையெழுத்திட்ட கடன்பத்திரத்தை திரும்ப கொடுக்காமல் அனிதா அலைக்கழித்துள்ளார்.

மேலும் மீண்டும் பணத்தை கொடு என மிரட்டியிருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வகுமார் விஷத்தை குடித்துவிட்டு எஸ்பி அலுவலகம் வந்துள்ளார். அப்போதுதான் மயங்கிவிழுந்துள்ளார். செல்வகுமார் சிகிச்சையில் இருக்கும்போதே உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது. அதனால் கடலூரிலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றினர்.

அங்கு செல்வகுமாருக்கு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் பலனின்றி துடிதுடித்து மரணமடைந்தார். அதையடுத்து செல்வகுமாரின் தந்தை கவலை நிலையத்தில் புகாரளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் அனிதா கைதுசெய்யப்பட்டுள்ளார். கந்துவட்டிக்கு காவலர் ஒருவரே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.