இந்திய அணியில் கோலி வந்ததும் நடையைக் கட்டப் போவது அஜிங்க்யே ரஹானேதான் என சொல்லப்படுகிறது. நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடருக்குப் பின் இன்று கான்பூரில் நடந்து முதல் டெஸ்ட் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஆடவில்லை. இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்து முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்து தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கேப்டன் கோலி வந்ததும், யாரை அணியில் இருந்து நீக்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மோசமான பார்மில் இருக்கும் ரஹானேதான் நீக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் ரஹானே மோசமான ஆட்டத்திறனோடு இருப்பதால் அவரின் இடம் இனிமேல் அணியில் கேள்விக்குறியாகவே இருக்கும்.