உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி, லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதி போட்டியில் விளையாடிய விளையாட்டிற்கு நேர் எதிராக இறுதி போட்டியில் விளையாடியது.
இந்திய அணிக்கு அதிரடி துவக்கம் கொடுத்த ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தபிறகு பொறுமையான பேட்டிங்கை கையில் எடுத்த இந்திய வீரர்களால் கடைசி வரையிலும் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலியை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காததால் வெறும் 240 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டானது.
இதன்பின் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டர்வீஸ் ஹெட் 137 ரன்களும், லபுசேன் 58 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் பெரிய போராட்டம் கூட இல்லாமல் இலக்கை மிக இலகுவாக எட்டிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளதால், முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், ஆடுகளத்தை வடிவமைப்பத்தில் இந்திய அணி செய்த தவறே இந்திய அணிக்கு தோலியையும் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “ஆஸ்திரேலியாவிற்கு சவாலாக இருக்கும் என இந்திய அணி வடிவமைத்த ஆடுகளமே. இறுதியில் இந்திய அணிக்கு எதிராக மாறிவிட்டது என்பதே எனது கருத்து. ஆடுகளத்தை வடிவமைப்பதில் இந்திய அணி தவறு செய்துவிட்டது. பிட்ச் சாதாரணமாக ஆசிய துணைக் கண்ட பிட்ச் போலத்தான் இருந்தது. பிட்ச் தயாரிப்பானது இந்தியாவிற்கு எதிராகவே திரும்பிவிட்டது.
இறுதிப் போட்டிக்கு முன் அகமதாபாத் மைதானத்தில் நான்கு போட்டிகள் நடந்து இருந்த நிலையில், அந்த நான்கு போட்டிகளிலும் பயன்படுத்தப்படாத பிட்ச்சை பயன்படுத்த ஐசிசி பிட்ச் ஆலோசகர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடந்த பிட்ச்சை மைதான ஊழியர்கள் தயார் செய்தனர்.
அது குறித்து ஐசிசி ஆலோசகர் கேட்ட போது பிசிசிஐ தான் பிட்ச்சை மாற்றுமாறு கூறியதாக தகவல் வெளியானது. அதனால் போட்டிக்கு முன்பே இந்தியா பிட்ச்சில் சாதகமான வேலைகள் செய்வது வெளிப்படையானது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவே இந்தியா பிட்ச்சில் மாற்றங்கள் செய்கிறது. குறிப்பாக பிட்ச்சில் உள்ள புற்களை அகற்றி இருப்பதாகவும் மைதான ஊழியர் அளித்த பேட்டியின் மூலம் தெரிய வந்தது.
இதை அடுத்து போட்டியின் போதே பிட்ச்சில் செய்த மாற்றம் இந்திய அணிக்கே எதிராக மாறி விட்டது, அதன் மூலம் நியாயம் கிடைத்துள்ளது என தெரிவித்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங். மேலும்
இந்திய அணி வலுவாக இருந்தது. ஆனால் பிட்ச் தயாரிப்பு இந்தியாவிற்கே எதிராக முடிந்துவிட்டது” என்று தெரிவித்தார். மேலும், இந்திய அணியிடம் மிகவும் புத்திசாலித்தனமான சிந்தனைக் குழு இருந்தது. ஆனால் நேற்று அவர்கள் மோசமாக பிட்சை உருவாக்கி தவறு செய்துவிட்டனர். இந்தியா இன்னும் ஒரு சிறந்த அணிதான் – ஆனால் ஆடுகளம் ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவாக மாறிவிட்டது. இதுதான் சிக்கல் என்று ரோஹித் சர்மாவின் முடிவுகளை ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்தார்.