வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் டெல்லி பாஜகவின் முழு பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது. இதற்காக அமித்ஷா முழு வீச்சில் தமிழக அரசியலில் களமிறங்கி திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் வேலைகளில் இறங்கி இருந்தார். இந்த நிலையில் இதற்கு முன்பு திமுக 200 தொகுதிகளுக்கு மேல் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் என்று முதல்வர் உட்பட திமுகவினர் அனைவரும் தெரிவித்து வந்தனர்.
ஆனால் இதற்கு முன்பு அதற்கான சாத்தியம் இருந்தது என்பதை தேர்தல் களம் உணர்த்தியது, காரணம் திமுகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் அதிமுக- பாஜக – சீமான் – விஜய் போன்ற நால்வரும் தனித்தனியாக போட்டிடும் பொழுது தமிழகத் தேர்தல் களம் 5 முனை போட்டியாக உருவெடுக்கும். அப்படி உருவெடுக்கும் பொழுது எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு எதிரான வாக்குகளை நான்காக பிரிக்கும் பொழுது, 200 தொகுதிகளுக்கு மேல் திமுக மிக எளிதாக வெற்றி பெற்று 2026 இல் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் இருந்தது.

ஆனால் இதில் அதிமுக 20 சதவீத வாக்கு வங்கிகளுடன், பாஜக 18 சதவீத வாக்கு வங்கிகளுடன், விஜய் 10 சதவீதம் வாக்கு வங்கிகள் உடன், சீமான் 8 சதவீத வாக்கு வங்கிகளுடன் 2026 சட்டசபை தேர்தலில் தங்களுடைய வாக்கு சதவீதங்களை நிரூபித்தாலும் கூட இவை அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே திமுகவை முற்றிலுமாக வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப முடியும் என்கின்ற கால நிலவரம் உள்ளது.
அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணியை மத்திய உள்துறை அமைச்சர் இறுதி செய்துள்ள நிலையில், இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியுமா என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி சேர்ந்துள்ளது கொங்கு மண்டலத்தில் இது வலுவான கூட்டணியாக பார்க்கப்படும். பிற மாவட்டங்களில் திமுக வீழ்த்த வேண்டும் என்றால் இன்னும் அதன் கூட்டணி வலுபெற வேண்டும் என்பதே கள நிலவரம் ஆக இருக்கிறது.
அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக தேமுதிக போன்ற கட்சிகள் இணையும் பொழுது வட மாவட்டங்களிலும் இந்த கூட்டணி வலுவான கூட்டணியாக கருதப்படும், அதே நேரத்தில் திமுகவை வீழ்த்துவதற்காக சிறிய சிறிய கட்சிகளை கூட ஒதுக்காமல் கூட்டணியில் இடம் பெற வைக்க வேண்டும் என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏற்கனவே தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்த ஜான்பாண்டியன், திருமாறன் ஜி, ஏசி சண்முகம், பாரிவேந்தர் போன்றவர்களையும் இந்த கூட்டணியில் தக்க வைத்து வருகிறது பாஜக தலைமை. அதே நேரத்தில் இந்த கூட்டணிக்குள் நடிகர் விஜய் மற்றும் சீமானையும் உள்ளே கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் சீமான் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் இந்த என் டி ஏ கூட்டணிக்குள் வரும் பொழுது திமுகவை எளிதாக வீழ்த்தி விடலாம் என்கின்ற திட்டமும் அமித்ஷாவிடம் உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணி இல்லாமல் ஐந்து முறை போட்டி நிலவி வந்தால் விஜய்க்கு சுமார் 10 சதவீதம் வரை வாக்குகள் பெறுவதற்கான சாத்தியம் இருந்தது.
ஆனால் தற்போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில் திமுகவை வீழ்த்தக்கூடிய கூட்டணி அதிமுக பாஜக கூட்டணி தான் என மக்களுக்கு நம்பிக்கை வரும் பொழுது விஜய்க்கு வாக்களிப்பது அந்த வாக்கு வீணாகிவிடும் அதனால் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களித்திடுவோம் என்று மக்கள் மனநிலை மாறும். அப்படி மாறும் பொழுது விஜயின் வாக்கு சதவீதம் மிகப்பெரிய அளவில் குறையும்.
அந்த வகையில் விஜய் மற்றும் சீமான் இருவருமே தனித்துப் போட்டியிடுவதால் அவர்களுக்கு எந்த ஒரு லாபமும் இல்லை. அது திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தான் வழிவகுக்கும், அப்படி திமுக ஆட்சிக்கு வருவதால் சீமானுக்கும் பாதிப்பு விஜய்க்கும் பாதிப்பு என்பதால் சீமான் மற்றும் விஜய் இருவருமே இந்த கூட்டணிக்குள் இழுத்து வருவதற்கு டெல்லி பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.