NDA கூட்டணியில் விஜய்… விஜய்க்கு 50 – பாஜகவுக்கு 50… கூட்டணி ஆட்சியை உறுதி செய்த அமித்ஷா…

0
Follow on Google News

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து தமிழகத்தில் சுமார் 18 சதவிகித வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்று இருந்தாலும், எதிர் கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழகத்தில் திமுகவை வீழ்த்த முடியும் என்பதால், தமிழகத்தில் அணைத்து எதிர் காட்சிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அதில் முதல் கட்டமாக அதிமுக – பாஜக கூட்டணியை தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே முடிவு செய்தார் அமித்ஷா. அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பே, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள TTV தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணியில் தொடர்வார் என பாஜக தரப்பில் இருந்து எடப்பாடியிடம் தெரிவிக்கப்பட்ட பின்பே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜய் , சீமான் உட்பட அணைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்கிற கோரிக்கை மறைமுகமாக விஜய் – சீமான் ஆகியோருக்கு விடுக்கப்பட்டது, மேலும் தொடர்ந்து விஜய் – சீமான் இருவரிடமும் தொடர்ந்து பாஜக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாகவே நடிகர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என தன்னுடைய விருப்பத்தை பதிவு செய்து இருந்தார். மேலும் அதிமுக தரப்பில் இருந்தும் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி புதிய கூட்டணி அமைக்க திட்டமிட்டார், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கரஸ் , விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தன்னுடன் கூட்டணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்து இருந்தார் விஜய்.

இதன் காரண்மாகவே பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்யாமல் இருந்து வந்தார் விஜய்,ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு கட்சியும் அந்த கூட்டணியை விட்டு வெளியேறுவதாக இல்லை, இதனை தொடர்ந்து விஜய் தனித்து தான் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் விஜய் போட்டியிடும் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடியும் மற்ற தொகுதிகளில் மூன்றாவது இடம் நான்காவது இடத்திற்கு விஜய் கட்சி தள்ளப்படும்.

இந்நிலையில் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இடம் பெறுவதற்காக பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பாஜகவுக்கு 50 தொகுதி, விஜய்க்கு 50 தொகுதி என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவிற்கு வழங்கப்படும் 50 தொகுதிகளில் இருந்து உள் ஒதுக்கீட்டில் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜி, AC சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டவர்களுக்கு தொகுதிகளை பாஜக ஒதுக்க இருக்கிறது. இந்த நிலையில் மீதமுள்ள 134 தொகுதிகளில் தேமுதிக, பாமக கட்சிகளுக்கு சில தொகுதிகளை பிரித்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி பார்த்தால், 90 முதல் 100 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடும் என கூறப்படுகிறது. மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான் என்பதை உறுதி செய்கிறது தமிழக அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here