சமீபத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள வில்லை, அதனை தொடர்ந்து முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இதனால் முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் அவருடைய மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வவருகிறது.
இதனை தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவருக்கும் இடையில் ஆன கருத்து வேறுபாடு குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் இருந்து பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பொதுவாகவே யார் வேட்பாளர் என்பதை திமுக தலைமை முடிவு செய்யும் என்று பரவலாக திமுகவில் பேசி வந்தாலும், அந்த தலைமை யார்? அதாவது வரும் 2026 சட்டசபை தேர்தலில் வேட்பாளரை முடிவு செய்யக்கூடியவர் முதல்வர் மு க ஸ்டாலின் அல்லது உதயநிதி ஸ்டாலினா என்கின்ற போட்டி தான் தற்போது முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையிலான மோதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

அதாவது ஒவ்வொரு இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியை கவனிக்க செய்ய வேண்டும் என்றும் முழுக்க முழுக்க மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக் கூடாது என்பது உதயநிதி ஸ்டாலினின் திட்டமாக இருந்திருக்கிறது. ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமித்தால் அவர்களுக்கு மாவட்ட செயலாளருக்கும் இடையில் ஒரு கோஷ்டி பூசல் உருவாகும், அது தேர்தல் நேரத்தில் சரிவராது என்று மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வர் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் ச பெரும்பாலான வேட்பாளர்களை தான் தேர்வு செய்வேன், முதல்வர் விருப்பப்பட்டு முப்பது முதல் 40 தொகுதிகளில் வேட்பாளரை தேர்வு செய்யலாம், குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மூத்த திமுக அமைச்சர்களுக்கு சீட்டு வழங்கக் கூடாது, இவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் இவர்களால் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தரும் என்றெல்லாம் உதயநிதி ஸ்டாலின் காய்களை நகர்த்தி இருக்கிறார்.
அதாவது சீனியர்களை ஓரம் கட்டி விட்டு இளைஞர்களை அதாவது தன்னுடைய ஆதரவாளர்களை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தர வேண்டும் என்பதில் தீவிரமாக வேலை செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் . அதாவது குறிப்பாக தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி தருவதற்காகவே சீனியர்கள் மீது உள்ள ஊழல் குற்ற சாட்டை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு இவர்களால் கட்சி அவப்பெயர் என்று ஓரம் கட்ட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார்.
ஆனால் இதற்கு முதல்வர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதாவது சீனியர்களை ஓரம் கட்டி விட்டார் அவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள், தனியாகவும் கட்சி தொடங்க மாட்டார்கள், இதே கட்சிக்குள் இருந்து கொண்டு பல குடைச்சலை கொடுப்பார்கள். அது வரும் 2026 தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வழி வகுத்து விடும் என்று முதல்வர் தரப்பில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் தற்பொழுது திமுகவில் இருக்கும் சீனியர் தலைவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள், அவர்களுக்கு தெரியும் அரசியல் ராஜதந்திரம் என்னவென்று, அவர்களை பகைத்துக் கொண்டு 2026 தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று, வேண்டுமென்றால் உதயநிதி ஸ்டாலின் விருப்பப்பட்ட ஒரு 40 வேட்பாளர்களை நியமிக்கலாம் மற்றது அனைத்துமே தன்னுடைய முடிவு தான் என முதல்வர் உறுதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், முதல்வர் – துணை முதல்வருக்கு இடையிலான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.