உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக, அதன் பின்பு சட்டமன்ற உறுப்பினராக, அதனைத் தொடர்ந்து அமைச்சராக, தற்பொழுது துணை முதல்வராக மிக குறுகிய காலத்திலேயே அடுத்த அடுத்த நிலைக்கு வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின். இந்த நிலையில் தற்பொழுது ஆட்சியில் அதிகாரமிக்க துணை முதல்வராக வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் கட்சியிலும் தனக்கு அதிகாரமிக்க பதவி வேண்டும் என காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியின் செயலாளராக இருந்தாலும், அது ஒரு அணியின் பிரிவாக தான் பார்க்கப்படுகிறது, ஆனால் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய பொறுப்பான, துணை பொதுச்செயலாளர், பொருளாளர், பொதுச்செயலாளர், போன்ற பதவிகள் தான். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தனக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்று காய்களை நகர்த்தி இருக்கிறார்.

ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வரும் 2026 சட்டசபை தேர்தலில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய தேர்தலுக்கான ஐவர் குழுவில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார் . ஆகையால் இதுவே அவருக்கு அதிகாரம் மிக்க பதவி தான் என்று முதல்வர் தரப்பு தெரிவித்தாலும், உதயநிதி ஸ்டாலின் தரப்பு இந்த குழு என்பது தேர்தல் வரும் வரை மட்டும்தான், தேர்தல் முடிந்து விட்டால் இந்த குழுவுக்கு வேலை இல்லை.
அதனால் கட்சியில் அதிகாரமிக்க பதவிகள் வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் சீனியர்களை ஓரங்கட்டும் விதமாக தமிழகம் முழுவதும் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டம் என்று பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் வகையில், குறிப்பாக புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உதயநிதி தரப்பில் முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் முதல்வரோ வரும் சட்டமன்றத் தேர்தலில் அனுபவிக்க சீனியர்களின் மாவட்ட எல்லையை குறைத்தால், அவர்கள் தேர்தலில் சுணக்கம் காட்டி விடுவார்கள், அதனால் நாம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியாது என இந்த கோரிக்கையையும் புறக்கணித்து விட்டார் முதல்வர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயநிதி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியில் அதிகாரமிக்கவர்களாக கொண்டு வர வேண்டும் என்று எடுத்த ஒவ்வொரு முடிவுக்கு முதல்வரிடம் இருந்து ஒத்துழைப்பு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல்வராக என மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார், இந்த நிலையில் மீண்டும் கட்சியில் அதிகாரமிக்க ஒரு பொறுப்பை கொடுத்தால் எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையான விமர்சனங்களை வைக்கக்கூடும்,
அந்த வகையில் தற்போதைக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட முடியாது என முதல்வர் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்ததால் கடும் அப்செட்டில் இருந்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளமல் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திமுகவில் முக ஸ்டாலின் – உதயநிதி இருவர் இடையிலான அப்பா மகன் சண்டை உச்சகட்டத்தை அடைந்தது என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்,
தற்பொழுது உதயநிதிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதியில் 40 தொகுதிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவருடைய ஆதரவாளர்கள், அவர் விருப்பப்படும் வேட்பாளரை அந்த தொகுதியில் நிறுத்திக்கலாம் என்று முதல்வர் தரப்பு அவரிடம் ஒப்படைத்து சமாதானம் செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது