டாஸ்மாக் நிறுவனம் தொடர்பான அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையின் தொடர்ச்சியாக, டாஸ்மாக் அலுவலக தலைமை அதிகாரி விசாகன் விசாரணைக்கு அழைக்கப்பட்டு நடத்திய விசாரணையில் பல உண்மைகளை அமலாக்க துறை அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் மூலம் நடந்த ஊழல் பணத்தை உதயநிதி ஸ்டாலின் நண்பர் ரத்தீஷ் கைக்கு தான் சென்றுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளார்கள் அமலாக்க துறை அதிகாரிகள்
இதனை தொடர்ந்து டாஸ்மாக் ஊழல் பணம் ரத்தீஷ் மூலம் எப்படி மணி லண்டரிங் நடந்துள்ளது, எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது, யார் கைக்கு இறுதியாக இந்த பணம் சென்றது என்பது அமலாக்க துறைக்கு தெரிந்தாலும், அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே, இதன் பின்னால் இருக்கும் அந்த முக்கிய புள்ளியை அமலாக்க துறை தட்டி தூக்க முடியும், அந்த வகையில் ரத்தீஸை நோக்கி விரைந்தது அமலாக்க துறை.

ஆனால் அமலாக்க துறை தன்னை நோக்கி வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட ரத்தீஷ் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். ரத்திஸிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தி அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை ரெகார்ட் செய்து, அந்த ஆதாரத்தை வைத்து தான், இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளியை அமலாக்க துறை தூக்க முடிவு செய்தது. அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனர்களில் நடந்த அமலாக்க துறை சோதனையின் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிறுவன தலைமை அதிகாரி விசாகன், அவரை தொடர்ந்து ரத்தீஷ், அடுத்து முக்கிய புள்ளி என அமலாக்க துறை நெருங்கி வந்த நிலையில் வெளிநாடு தப்பி ஓடிவிட்டார் ரத்தீஸ்.
இந்நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் அமலாக்க துறை சோதனை மேற்கொள்ளும் பொழுது, இதில் தொடர்புடையவர்கள் அவசர அவசரமாக டெல்லி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முன்பு செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை சோதனையின் போதும் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று திரும்பினார்.
அதே போன்று அமைச்சர் துறை முருகனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த அமலாக்க துறை சோதனையின் போது அவரும் அவசர அவசரமாக டெல்லி சென்று திரும்பினார், இப்படி தங்களை காப்பாற்றி கொள்ள தான் அமலாக்க துறை வலையில் சிக்கியவர்கள் டெல்லி செல்வதாக கூறப்படும் நிலையில், தபொழுது டாஸ்மாக் தொடர்பான இடங்களில் நடைபெற்ற அமலாக்க துறை சோதனையின் விசாரணை, இறுதி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில் முதல்வர் முக ஸ்டாலின் வரும் 24 தேதி டெல்லி செல்ல இருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.
கடந்த வருடம் 2024 ஜூலை 27-ம் தேதி நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள நிதிகளை மத்திய அரசு விடுவிக்காதது ஆகிய காரணங்களால் இக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தார், ஆனால் இந்த வருடம் பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக உதயநிதியின் நண்பர் ரத்தீஷ் சிக்கி வெளிநாடு தப்பி ஒட்டியுள்ள இந்த சூழலில், முதல்வர் டெல்லி செல்வது, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சிக்கி இருக்கும் யாரோ ஒருவரை காப்பாற்ற தான் என்கிற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.