முதலமைச்சருக்கு சவாலாக இருக்கும் மூவர்..! இவர்களை என்ன செய்ய போகிறார் முக ஸ்டாலின்.?

0
Follow on Google News

தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எதிர்கட்சிகளை விட பெரும் சவாலாக இருக்க போவது அவருக்கு ஆதரவாக செய்யப்படுவதாக அவரை சிக்கலில் சிக்க வைக்கும் திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்ன, திமுக எம்பி ஆ.ராசா, மற்றும் பிரபல பேச்சாளர் சுந்தரவள்ளி போன்றோர் தான் திமுகவுக்கு எதிராகவும், முதல்வர் முக ஸ்டாலினை மன உளைச்சலை ஏற்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து அதும் பெண்கள் மத்தியில் திமுகவுக்கு எதிராக கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது, இதற்கு பின்பு திமுக பிரசாரங்களில் ஆ.ராசா தென்படவில்லை, ஆ.ராசா இது போன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மிக கீழ்த்தரமாக பேசியவர்.

இதே போன்று திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா மற்றும் பேச்சாளர் சுந்தரவள்ளி இருவரும் திமுகவுக்கு எதிராக ஒரு கட்டமைப்பை மக்கள் மத்தியில் உருவாக்குவதில் ஜகா கில்லாடி, இவர்கள் போன்று திமுகவில் இன்னும் 100 பேர் இருந்தால் திமுக சரிவை அவர்களே பார்த்து கொள்வார்கள் என எதிர்கட்சி பிரமுகர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது, இவர்களின் பேச்சு அந்த அளவுக்கு அநாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும்.

கடந்த காலத்தில் திமுக நாத்திகம், பகுத்தறிவு பேசி வந்தாலும், தற்போது காலத்துக்கு ஏற்ப அவர்களின் நிலைப்பாடுகளை மாற்றி வருகின்றனர், திமுகவில் இருக்கும் 90% பேர் இந்துக்கள் என்று வெளிப்படையாகவே ஸ்டாலின் பேசியது, முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இந்தியா முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் திருத்தளங்களுக்கு சென்று வழிபடும் புகைப்படம் வெளியாவது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் நிலை உருவாகி உள்ளது.

ஆனால் தமிழன் பிரசன்னா மற்றும் சுந்தரவள்ளி ஆகியோரின் இந்து எதிர்ப்பு பேச்சுக்கள் திமுகவை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகிவிடும், அதே போன்று எதிர் தரப்பில் இருப்பவர்களை இவர்கள் அநாகரிகமாக விமர்சனம் செய்து பேசுவது, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை அநாகரிகமாக பேசும் நிலைக்கு எதிர் தரப்பில் இருப்பவர்களை தள்ளப்படும். ஆகையால் இவர்களை திமுக தலைமை ஒதுக்கி வைத்தால் திமுகவுக்கு எதிரான பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.