அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, பின்பு முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பே சசிகலா சிறைக்குச் செல்ல நேரிட்டதால். அவசர அவசரமாக தனக்கு விசுவாசமாக இருப்பார் என்கின்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அமர்த்தியவர் சசிகலா.
ஆனால் ஜெயலலிதா இரண்டு முறை சிறைக்கு செல்வதற்கு முன்பு முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமித்துவிட்டு ஜெயலலிதா சிறையில் இருந்து திரும்பியதும், அதை மீண்டும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து தன்னுடைய விசுவாசத்தை காட்டியவர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் தன்னை சசிகலா முதல்வராக அறிவித்த உடனே, தவழ்ந்து சென்று சசிகலா காலை பிடித்து நன்றி சொன்ன எடப்பாடி பழனிச்சாமியின் செயலை தமிழக மக்கள் மறக்க முடியாது.
ஆனால் யாரால் முதல்வரானோம் என்பதை மறந்து, சசிகலாவவே அதிமுகவில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான வேலைகளை கச்சிதமாக செய்து முடித்தார் எடப்பாடி பழனிச்சாமி, அதே போன்று இரட்டைத் தலைமையாக உள்ள அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை வெளியேற்றிவிட்டு கட்சியை முழுவதும் தனது ஒரே ஆள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டார் எடப்பாடி பழனிச்சாமி, அதற்காக பன்னீர்செல்வத்தை வெளியேற்றுவதற்கான வேலைகளையும் தொடங்கினார்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் ஆதிக்கம் செலுத்த அவருக்கு உறுதுணையாக அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த தற்பொழுது அதிமுக எடப்பாடி அணியின் அதிகாரமிக்கவர்களான வலம் வரும், எஸ்பி வேலுமணி தங்கமணி, எம் ஆர் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், பொன்னையன் ஆகியோர் அனைவரும் எடப்பாடியின் அரசியலுக்கு பக்கபலமாக இருந்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கட்டுக்குள் அதிமுகவை கொண்டு வரும் முயற்சியை சிறப்பாக செய்து வருகிறார் என்கிற விமர்சனத்தை மறுக்க முடியாது.
இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிமுக என்கின்ற ஒரு கட்சியை கைப்பற்றும் வேலைகளில் தீவிரம் காட்டி வருவதை தமிழக அரசியலில் வெட்ட வெளிச்சமாக பார்க்க முடிகிறது. அதிமுகவில் பிற சமூகத்தைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர்களாக வலம் வந்தவர்களை தேவைக்கு மட்டும் தற்பொழுது பயன்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சார்ந்த சமூகத்தின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள அதிமுக, எதிர்காலத்தில் எப்படி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய ஃபார்வர்டு பிளாக் கட்சி தமிழகத்தில் அந்த கட்சியை தலைமை தாங்கி வழிநடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைவுக்குப் பின்பு ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பின்பு, அது ஒரு சாதி கட்சியாக மாறி தற்போது காணாமல் சென்று விட்டது என்றே சொல்லலாம்.
அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி சார்ந்த சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் அதிமுக, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஒரு சாதி கட்சியாக சுருங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் காணாமல் போய்விடும் என்று பல அரசியல் விமர்சகர்கள் எச்சரித்து வருகிறார்கள். இந்த நிலையில் அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல தற்பொழுது ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு இடையில் நடந்த பிரச்சனையில் எடப்பாடி கை ஓங்கி இருந்தாலும் கூட,
எடப்பாடி பழனிச்சாமி அவர் சார்ந்த சமூகத்தைச் சார்ந்த வேலுமணி, தங்கமணி, எம் ஆர் விஜயபாஸ்கர், பொன்னையன், செங்கோட்டையன் ஆதரவோடு தற்போது அதிமுகவை முழுவதும் கிட்ட தட்ட கைப்பற்றி விட்ட நிலையில், சாதி கட்சியாக சுருங்கி அழிவில் விளிம்பில் இருக்கும் அதிமுக அஸ்தவனம் ஆகும் சூழல் தான் அந்த கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.