திமுக கூட்டணியில் அங்கம் வகித்து MLA, MP பதவிகளை ருசித்து வரும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவனின், சமீபகால பேச்சு திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திமுக தலைமையை மிகப்பெரிய அளவில் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது தொல் திருமாவளவனின் சமீபகால பேச்சு.
அதாவது தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திமுக தலைமையை மிரட்டும் வகையில் தோல் திருமாவளவன், பலர் என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அதில் விஜய் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தினார், அதேபோன்று டெல்லியில் ஒரு மத்திய அரசின் உயர் அதிகாரி பாஜகவுக்கு ஆதரவாக என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் அதை எல்லாம் நான் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டேன், நான் நினைத்திருந்தால் விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் என்னுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய போது அவர்களையும் ஹோல் செய்து வைத்திருக்கலாம், ஆனால் அதெல்லாம் வேண்டாம் என்று புறந்தள்ளி விட்டேன், என்றும் அதாவது சினிமா படத்தில் வரும் கவுண்டமணி காமெடி போல் அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாங்க,
ஜப்பானில் ஜாக்கிசான் கூப்பிட்டார், என்பது போன்று தொல் திருமாவளவன் திமுக தலைமையை மிரட்டி அதிக சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, விஜய் என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்னுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார், டெல்லியில் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் பாஜகவுடன் இணைய கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தினார், என்றெல்லாம் திருமாவளவன் பேசுவது,
வரும் 2026 சட்டசபை தேர்தலில் எனக்கு கூட்டணிக்கான ஆஃபர் பல இடங்களில் இருக்கு, நான் கேட்கும் தொகுதியை திமுக தரவில்லை என்றால் வேறு ஒரு கூட்டணிக்கு சென்று விடுவேன் என்று மிரட்டும் தோணியில்தான் திருமாவளவன் இப்படி பேசுவதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் திருமாவளவனின் இந்த பேச்சை உன்னிப்பாக கவனித்து வரும் திமுக தலைமை, அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதால் திருமாவளவன் இனி அதிமுக கூட்டணியில் இணைய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விஜயுடன் திருமாவளவன் கூட்டணிக்கு சென்றாலும் கூட விஜய் அதிக தொகுதிகளை வாரி விஜய் வழங்கினாலும் ஒரு தொகுதி கூட திருமாவளவனால் வெற்றி பெற முடியாது, காரணம் விஜய் கட்சி என்பது ஒரு வெற்றி பெறக்கூடிய கட்சி அல்ல, வரும் 2026 தேர்தல் என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கான தேர்தல் என்பதை திமுக தெளிவாக இருக்கிறது.
அந்த வகையில் திருமாவளவனின் இந்த சலசலப்புக்கெல்லாம் செவிசாய்க்காமல் நாங்கள் கொடுக்கும் தொகுதியில் போட்டியிட்டால் போட்டியிடட்டும் இல்லையென்றால் கூட்டணியை விட்டு வெளியேறட்டும் என்கின்ற முடிவில் திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி நடிகர் விஜய் உடன் இணைந்தால்,
அவர் திமுக கூட்டணியின் வாக்குகளை பிரித்து திமுகவின் தோல்விக்கு துணையாக இருக்கலாமே தவிர அவரால் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது என்கின்றது அரசியல் கள நிலவரம். அந்த வகையில் எப்படி 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்று விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார்களோ, அதே போன்ற ஒரு சூழலைத்தான் விஜய்க்கு தொல் திருமாவளவன் செய்து விடுவார் என்கிறது அரசியல் கால நிலவரம். அந்த வகையில் என்னதான் தொல் திருமாவளவன் வீர வசனம் பேசினாலும் கடைசி நேரத்தில் திமுக கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொண்டுதான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.