ஹீரோயிஸமாக நினைக்கும் அடிமாட்டு மூளை..!பிரபல விஜய் பட இயக்குனரை வெளுத்து வாங்கிய ஷியாம் கிருஷ்ணசாமி.!

0
Follow on Google News

கனமழை காரணமாக தலைநகர் சென்னை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருப்பது குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி, தனது சமூக வலைதள பக்கத்தில், சென்னையின் கட்டமைப்பு வசதிகளைச் சர்வதேச அளவிற்கு உயர்த்த, 2006-2011 மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியிலிருந்தபோது 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அதன் மூலம் அன்றைய திமுக அரசு எந்தந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை, அதேபோல 2011-க்கு பிறகு 2021 வரை ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை எடப்பாடி அரசு என்ன செய்தது? என்பதும் தெரியவில்லை. என்றும், மேலும், இந்த வெள்ள காலத்திலும் மக்களின் துயர் துடைக்க செயல்படாமல் வெறும் விளம்பரத்தில் ஈடுபடுவது உகந்தது அல்ல.

அருவருப்பை உண்டாக்கும் விளம்பர மோகத்தை விட்டுவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்களின் துயர் துடைக்கு நீங்களும் உங்கள் சாகாக்களும் அரசு இயந்திரங்களையும் ஈடுபடுத்துங்கள்.. சென்னையில் மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உலகிற்கே தெரியும்! முதல்வர் வீதி வீதியாக ஆய்வு செய்து தெரிய வேண்டும் என்பதில்லை.

இது திமுகவின் விளம்பரம் மோகத்திற்கும், வரவுள்ள மாநகராட்சி தேர்தலுக்கு போட்டோ காட்டுவதற்கும் உதவுமே தவிர தத்தளிக்கும் மக்களுக்கு உதவாது என ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார். இதற்கு மறைந்த பிரபல தமிழ் சினிமா இயக்குனர் மகேந்திரன் மகன் ஜான், யாராவது ஒருத்தருக்கு மழைக்கு எதாவது சின்ன உதவி பண்ணீங்களா? இல்ல இது மாதிரியே வெட்டி போஸ்ட் போட்டுட்டு உக்கார்ந்து இருக்கீங்களா? என ஷியாம் கிருஷ்ணசாமிக்கு பதிலளித்திருந்தார் ஜான்,

இதற்கு பதிலடி தரும் விதத்தில் ஷியாம் கிருஷ்ணசாமி, முழங்கால் தண்ணீரில் ஷூட்டிங்கு, வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை நிற்கவைத்து ரொட்டி பாக்கெடு கொடுத்து படம் எடுப்பதே ஹீரோயிஸமாக நினைக்கும் இது போன்ற அடிமாட்டு மூளைகள் இருக்கும் வரை, நகரத்தின் கட்டமைப்பு சீர்படுத்துதல், நிரந்தர தீர்வை பற்றி திராவிட ஸ்டாகிஸ்டுகள் எதற்கு யோசிக்கனும்? என ஷியாம் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் மகேந்திரன் மகன் ஜான் தொடர்ந்து சமூக ஊடகம் வாயிலாக திமுகவுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருவது குறிப்பிட்டத்தக்கது.

எந்த ஒரு சுய அறிவு இல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரள முதல்வருக்கு நன்றி சொல்கிறார். தமிழக முதல்வர் வடிவேலு போன்று பேசக்கூடாது. – அண்ணாமலை