கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பொழுது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.அப்போது திமுக தரப்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது அந்த மனு தாக்கலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகன் வேறு, திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன் வேறு என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் தந்தை துரைமுருகண் சிக்கலில் சிக்கினால், திமுக பொதுச் செயலாளர் என்கிற காரணத்தினால் திமுகவுக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் திமுக தரப்பில் இது போன்று மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலின் பொழுது துரைமுருகன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது அங்கு பணம் ஏதும் கிடைக்கவில்லை.

இதன் பின்பு துரைமுருகன் தொடர்புடைய குடோனில் 12 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் அனைத்துமே புதியதாக வெளியான 200 ரூபாய் நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணம் எப்படி துரைமுருகன் கைக்கு வந்தது என்று விசாரித்ததில், வேலூரில் இருக்கும் கனரா பேங்க் வங்கியின் இருக்கும் உயர் அதிகாரி ஒருவர் துரைமுருகன் நெருக்கமாக இருந்தது ஆக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அந்த வழக்கு சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்த நிலையில் அந்த வழக்கை தூசி தட்டடி அமலாக்க துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இந்த நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலின் பொழுது துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட பணம் திமுகவுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டால் திமுக கட்சியே தேர்தலில் போட்டியிடாத சூழல் உருவாகும்,
அதாவது இந்த பணம் திமுக பொதுச் செயலாளருக்கு சொந்தமானது என்றால், அது திமுகவின் பணம் என்று கணக்கிடப்பட்டால், திமுக தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் என்பதால் தான், திமுக தரப்பில் நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் அப்பா துரைமுருகன் வேறு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேறு என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் துரைமுருகன் பெயரில் இருக்கும் இரண்டு வழக்குகள் மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது, அதில் ஒன்று 96 முதல் 2001 காலகட்டத்தில் துரைமுருகன் அமைச்சரான அதன் பின்பு வந்த ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு செய்த போது, துரைமுருகன் அளவுக்கு அதிகமாக சுமார் மூன்று கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டது.
அதன் பின்பு வந்த திமுக ஆட்சியில் துரை துரைமுருகன் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்ற அறிவித்தது, அந்த வழக்கை தற்பொழுது மீண்டும் தூசி தட்டி விசாரிக்க தொடங்கியுள்ளது நீதிமன்றம், அதனைத் தொடர்ந்து 2006 இல் இருந்து 2011 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமான சுமார் ஒன்றரை கோடி சொத்து சேர்த்ததாக அடுத்து பதியப்பட்ட வழக்கையும் தூசி தட்டி உள்ளது நீதிமன்றம்.
மேலும் 2021 தேர்தலின் போது துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்ததில் அவருடைய மனைவிக்கு சொந்தமான ஒரு இடத்தை வெறும் ஒன்ரை கோடிக்கு குறைவாக காட்டி இருக்கிறார், ஆனால் அந்த சொத்தில் மதிப்பு சுமார் 28 கோடி என்று கூறப்படுகிறது, அந்த வகையில் மீண்டும் அமலாக்கத்துறை இதெல்லாம் குறிவைத்து துரைமுருகனை இறுக்கிப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது