தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது, ஆளும் திமுக அரசுக்கு எதிரான மக்களின் கோபமும் தேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது.குறிப்பாக சிட்டிங் திமுக அமைச்சர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதுமே அந்தந்த தொகுதிகளில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியில் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.
அதே நேரத்தில் அமைச்சர் பெரிய கருப்பனை எதிர்த்து போட்டியிடும் திருமாறன் ஜி பிரச்சாரத்தின் போது, அந்த தொகுதி மக்கள் உங்கள் வெற்றியின் மூலம் தான் எங்களுடைய விடிவு காலம் உள்ளது, எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என மலர்ந்து முகத்துடன் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சென்ற திருமாறன் ஜியிடம் நம்பிக்கை தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தொடர்ந்து 20 வருடமாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துவரும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் பெரியகருப்பன் அந்த தொகுதிக்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார் என்று அந்த தொகுதி மக்களிடம் கேட்டால், அவர்கள் நம்மிடம் அமைச்சர் பெரிய கருப்பன் 20 வருடமாக இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து எங்களுக்கு என்ன செய்தார் என்கிற கேள்வியை கேள்வி கேட்ட நம்மிடமே கேட்கிறார்கள்.
இந்நிலையில் தொடர்ந்து 20 வருடமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருக்கிறார் அவருக்கு வாக்களியுங்கள் என திருப்பத்தூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினர் கடந்து 20 வருடமாக திருப்பத்தூர் தொகுதிக்கு பெரியகருப்பன் என்ன செய்தார் என்று பேசி வாக்குகளை கேட்க தயங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் திருப்பத்தூர் தொகுதியில் எந்த ஒரு தொழில் வளர்ச்சியும் இல்லை, குறிப்பாக டிஜிட்டல் இந்தியாவில் பல தொகுதிகள் வளர்ச்சியை நோக்கி சென்ற நிலையில், திருப்பத்தூர் தொகுதி இன்னும் 40 வருடங்கள் பின் தங்கி இருப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது, கண்ணுக்கு எட்டிய தூரம் கருவேல மரங்கள், குறிப்பாக ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று, திருப்பத்தூர் பேருந்து நிலையமே சாட்சி திருப்பத்தூர் தொகுதி எந்த அளவுக்கு பின் தங்கிய தொகுதியாக உள்ளது என்பதற்கு.
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற அந்த மக்களின் கோரிக்கையை கூட நிறைவேற்றாதவர் தான் அமைச்சர் பெரியகருப்பன் என்கிற ஆதங்கத்தை கொடுக்கிறார்கள் திருப்பத்தூர் மக்கள். மேலும் பெரிய கண்மாய் நீா்வரத்து வழித்தடங்களைச் சீரமைக்க படவில்லை, தொழில்சாலைகள், அரசுக் கல்லூரிகள் ஆகியவை இந்த தொகுதி வேண்டும் என்கிற கோரிக்கையும் திருப்பத்தூர் தொகுதி மக்களிடம் உள்ளது.
குறிப்பாக திருப்பத்தூா் நகரில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் இருப்பதையும், மூடப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும் திறப்பதற்கு வழிவகை செய்யாமல் உள்ளத்தையும் மிகவும் வேதனையுடன் பகிர்கிறார்கள் திருப்பத்தூர் மக்கள்.
அந்த வகையில் அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருக்கும் திருப்பத்தூர் மக்கள், போதும் 20 வருடமாக எங்களை வாட்டி வதைத்தது என்கிற முடிவுக்கு வந்துவிட்டதை, மாற்றத்திற்காக அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து போட்டியிடும் திருமாறன் ஜிக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட இருப்பதையும் உணர்ந்துகிறது திருப்பத்தூர் தேர்தல் களம்.

