திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும், திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் திமுகவினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதை நம்பி நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் சிலர் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் ரத்து செய்துவிடுவார்கள் என நம்பிக்கையில் நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டதை நிறுத்தி கொண்டனர்.
ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது, நீட் தேர்வு திறமையான மாணவர்களுக்கு கிடைத்த வர பிரசாதம் என்பதை உணர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை ஆர்வமுடன் எதிர்கொண்டனர். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுகவை நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இந்த வருடம் நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதற்கு காரணம் பாஜக மற்றும் அதிமுக என குற்றசாட்டினார் உதயநிதி ஸ்டாலின்.
இது குறித்து பிரபல எழுத்தாளர் மாரித்தாஸ் தெரிவித்ததாவது, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்வோம் என சொன்ன உதயநிதி எங்கே? அவர் சொல்வது பொய்யென்றும் அன்று சொன்னேன், இனி வரும் 4வருடமும் நீட் எதிர்த்து தீர்மானம் அது இது என்று மக்களை முட்டாள் ஆக்குவர் என இன்றும் சொல்கிறேன். மக்களை ஏமாற்றும் கருணாநிதி அரசியல் இது. அதை அவர் வாரிசுகள் செய்கிறார்கள். ஆனால் அறிவு நமக்கு வேண்டும்.
வேதனை என்னவென்றால் இவர்கள் அரசியல் செய்ய மக்களைத் தவறாகத் தூண்டிவிட்டதும் , அதை நம்பி மாணவர்கள் தற்கொலை செய்ததும், அதற்கு ஊடகங்கள் ஒத்து ஊதியதும் தான். இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு எந்த அளவுக்கு அருவருப்பான அரசியலைக் கருணாநிதி செய்தாரோ அதற்கு எந்த குறையும் இல்லாமல் உதயநிதி ஆரம்பித்துள்ளார். கருணாநிதி குடும்பத்தினருக்கு என் கேள்வி “இதுலாம் ஒரு வாழ்க்கையா?”. இவ்வளவு கொள்ளை அடித்து இந்த மக்களிடம் சம்பாரித்துவிட்டு இந்த மக்களையே மூன்றாவது தலைமுறையாக ஏமாற்ற எப்படி மனம் வருகிறது உங்களுக்கெல்லாம்?
மேலும் நீட் நீக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும் என முதல்வர், முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி கூறியுள்ளது, கட்சதீவை வைத்து அரசியல் செய்த கருணாநிதி அடுத்த சட்ட போராட்டம் நடத்துவேன், எதிர்த்து தீர்மானம், மீட்க தீர்மானம் என வகை வகையாக ஏமாற்றியது அவர் அரசியல். அதே பாணியில் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி என்றும் நல்ல குடும்பம் என தெரிவித்த மாரித்தாஸ்,
மேலும் உதயநிதியை திமுகவை நீட் விவகாரத்தில் இருந்து காப்பாற்ற எதாவது பரபரப்பான செய்தி கிடைக்காதா மக்களை திசை திருப்ப என்று அலைகிறார்கள் ஊடகங்கள். திமுக நீட் விவகாரத்தில் பச்சையா பொய் சொல்லி மாணவர்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல் மேலும் ஏமாற்றத் துணிகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் மீடியா என எழுத்தாளர் மரித்தாஸ் தெரிவித்துள்ளார்.