சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசும், தமிழக டாஸ்மாக் நிறுவனமும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதை தொடர்ந்து, இந்த டாஸ்மாக் அதிரடி சோதனையில் மிகப்பெரிய ஆதாரம் சிக்கியுள்ளது, அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை என்பதால் தான், இந்த அமலாக்கத்துறை சோதனை எதிர்த்து , தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இந்த சோதனை நடைபெற்றது , மேலும் அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் நாடி இருக்கிறது தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும்.
இந்த நிலையில் தற்போது நடந்த அமலாக்கத்துறை சோதனையில், சுமார் 1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், இது அடுத்தடுத்து விசாரணையில் மேலும் ஆதாரங்கள் சிக்கி, லட்சம் கோடியை தொடும் என்று பரவலாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மிகப்பெரிய ஊழலில் திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு தொடர்பு இருக்கிறது என்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.

குறிப்பாக டாஸ்மாக் மூலம் வந்த ஊழல் பணத்தை வெள்ளையாக்கும் வகையில் சினிமா விநியோகம் செய்யப்பட்டுள்ளது, மற்றும் ரியல் எஸ்ட்டேட் ல் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஊழல் நடப்பதே திமுக தலைமை குடும்பத்திற்காக தான் என்றும், அப்படி மிகக் குறுகிய காலத்தில் செந்தில் பாலாஜி பல கோடி தலைமை குடும்பத்திற்கு சம்பாதித்து கொடுத்ததனால் தான் , அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வரும்வரை துணை முதல்வர் பதவியை ஏற்காமல் உதயநிதி காத்திருந்தார் என்றும்,
அதே நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வதற்கு முன் என்ன துறையை வகித்தாரோ, அதே துறையை கொடுத்து அவர் மனதை குளிர வைத்தது திமுக முதன்மை குடும்பம், இந்த நிலையில் தற்போது நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பது, திமுக முதன்மை குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனால் தான் அதிகாரிகளையும் ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்தக்கூடாது, கைப்பற்றப்பட்ட பொருள்கள் சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறது தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனம். இதில் மூன்று முக்கிய அதிகாரிகளை அமலாக்கத்துறை குறி வைத்துள்ளதாகவும். அதில் ஒரு அதிகாரியிடம் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக தொடர்பில் இருந்ததற்கான தொலைபேசி உரையாடலை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தொலைபேசி உரையாடல் மூலம் உரையாடல் உட்பட்ட பல ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி அடுத்த கட்ட விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கயிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி போன்று அதிகாரிகள் முதன்மை குடும்பத்தை காப்பாற்ற நினைக்க மாட்டார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.
ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு அமலாக்கத்துறை விசாரிக்கும் பொழுது, நம்ம தப்பித்தால் போதும்என்று, ஒரு கிளிப்பிள்ளை போன்று டாஸ்மாக் அதிகாரிகள் அமலாக்கத்துறையிடம் அப்படியே உண்மையை கக்கி விடுவார்கள் என்பதற்காக தான் இந்த விசாரணை நடத்தக்கூடாது, மேலும் விசாரணையின் போது டாஸ்மாக் அதிகாரிகளை கொடுமைப்படுத்த கூடாது என்றெல்லாம் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும்.
ஆனால் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி அமலாக்க துறை விசாரிக்கும் பொழுது, நிச்சயம் திமுக முதன்மை குடும்பத்தினர் கொத்தாக மாட்டுவார்கள், அந்த வகையில் திமுக முதன்மை குடுமபத்தினரை எப்படி டெல்லி முன்னள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதேபோன்று முதன்மை குடும்பத்தை அடைக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதா தகவல் வெளியாகியுள்ளது.