தட்டி தூக்கிய அமலாக்க துறை… வசமாக சிக்கிய உதயநிதி … யார் இந்த ஆகாஷ் பாஸ்கர்…

0
Follow on Google News

ஒரு பக்கம் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் ஆகாஷ் பாஸ்கர் என்பவரை கூறி வைத்து அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது,இந்த நிலையில் யார் இந்த ஆகாஷ் பாஸ்கர்.? அவருக்கும் திமுகவுக்கும் என்ன தொடர்பு.? குறிப்பாக அவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு.? என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

ஆகாஷ் பாஸ்கரின் தந்தை சேலத்தில் நகைக்கடை மற்றும் வேலன் மோட்டார்ஸ் என தொழில் அதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு தொழிலதிபரின் மகனான ஆகாஷ் பாஸ்கர் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வருகிறார், இங்கே பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சினிமா துறையைச் சார்ந்த மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் ஆகாஷ் பாஸ்கருக்கு அறிமுகம் ஆகிறார்கள். இந்த ஒரு சூழலில் கடந்த 2021 சட்டசபை தேர்தல் சில நாட்களுக்கு முன்பு ஆகாஷ் பாஸ்கர் சென்னையில் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இந்த ஐந்து கோடி ரூபாய் திமுகவின் தேர்தல் செலவுக்கான பணம் என்கின்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. இந்த நிலையில் 2021 திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆகாஷ் பாஸ்கர் தந்தைக்கு சொந்தமான வேலன் மோட்டார்சில் அவர்களுக்கு 5 பேருந்துகள் மட்டுமே இருந்தது. ஆனால் கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் தற்பொழுது அவர்கள் கைவசம் இருந்த ஐந்து பேருந்துகள் தற்போது 50 பேருந்தாக மாறி உள்ளது.

மேலும் புதிய பள்ளி மற்றும் பல தொழில்களில் ஆகாஷ் பாஸ்கர் குடும்பம் பல கோடிகளை முதலீடு செய்துள்ளது, திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கு வருடத்தில் இப்படி அசுர வளர்ச்சி பெறுவதற்கு எங்கிருந்து ஆகாஷ் பாஸ்கருக்கு பணம் வந்தது என்கின்ற சந்தேகம் எல்லாருக்குமே உண்டு. அது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக உருவெடுத்த ஆகாஷ் பாஸ்கர் தனுஷ் நடித்த இட்லி கடை படத்தை தயாரித்தவர்,

மேலும் அவர் கைவசம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி, சிம்பு நடிக்கும் ஒரு படம், அதர்வா நடிக்கும் இதயம் முரளி என பெரிய பட்ஜெட் படங்கள் அவர் கைவசம் உள்ளது. இந்த மொத்த படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் 450 கோடி என்று பேசப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது ஆகாஷ் பாஸ்கருக்கு எப்படி மிக குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் வந்தது என்கின்ற சந்தேகம் அமலாக்கத்துறைக்கு வலுத்த நிலையில். தற்போது ஆகாஷ் பாஸ்கரை குறி வைத்து இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கர் திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கர் மிகப்பெரிய செலிபிரிட்டி கிடையாது, அந்த வகையில் மிகக் குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு சினிமா பிரபலங்கள் அவரிடம் நெருக்கமாக காரணம் என்ன என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆகாஷ் பாஸ்கருக்கும் எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், ஆகாஷ் பாஸ்கரின் திருமணத்திற்கு அவர் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பே பல மடங்கு ஆகாஷ் பாஸ்கரின் வருமானம் பெரியுள்ளது.

ஆகையால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆகாஷ் பாஸ்கர் மூலம் திமுகவுக்கு ஃபண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், அவரிடம் திமுக தரப்பிலிருந்து மிகப்பெரிய தொகையை கொடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பரவலாக கூறப்படும் நிலையில், இந்த அமலாக்கத்துறை சோதனை ஆகாஷ் பாஸ்கரை குறி வைத்தா.? அல்லது ஆகாஷ் பாஸ்கரை வைத்து உதயநிதி ஸ்டாலினை குறி வைத்தா .? என்கின்ற பரபரப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here