எடப்பாடி கனவில் மண்ணை அள்ளிப்போட்ட தேர்தல் ஆணையம்… மகிழ்ச்சியில் ஒபிஎஸ்..!!

0
Follow on Google News

கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, அதிமுகவை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, அதற்கான நகர்வுகளை நகர்த்தினார்.

ஆனால் ஒற்றை தலைமைக்கு பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தி தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என நியமித்து கொண்டார். மேலும் இடைக்கால பொதுச் செயலாளர் தொடர்பான விபரங்களும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் எடப்பாடி நடத்திய பொது குழு செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தற்பொழுது நிலுவையில் உள்ள அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. நீதிமன்றத்தில் அதிமுக குறித்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு முன்னெச்சரிகையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் பல அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார் ஓபிஎஸ்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில், எடப்பாடிக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வரும் பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடத்தி தன்னுடைய பலம் என்ன என்பதை காண்பித்துள்ளார். இந்நிலையில் எடப்பாடி – ஓபிஎஸ் இருவருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என அச்சிடப்பட்ட கருத்து கேட்டு ஒரு கடிதம் ஒன்றை சட்ட ஆணையத்தின் தலைவர் அனுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பியது போன்று எடப்பாடி தரப்பினர் தேர்தல் ஆணையமே எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் அங்கீகரித்து விட்டது என்கின்ற ஒரு தவறான செய்தியை பரப்பி தங்களுக்கு தாங்களே மகிழ்ச்சி அடைந்து கொண்டனர்.

இந்த நிலையில் கரகாட்டக்காரன் படத்தில் வரும் காரை இப்ப யார் வச்சிருக்கா.? என்பது போன்று அதிமுக தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கின்ற குழப்பம் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இருந்து வந்தது. இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில் அமைத்துள்ளது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம்.

அதிமுகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பெயரிட்டு அனுப்பப்பட்டுள்ளது. நான் தான் இடைக்கால பொதுச் செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வந்தாலும், ஓ. பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவதை அங்கீகரிக்கும் வகையில் தற்பொழுது தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு அனுப்பிய கடிதம் அமைந்துள்ளது.

ஆனால் இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் ஏற்று கொள்ளாமல் திருப்பி அனுப்பி இருந்தனர். ஆனால் தேர்தல் அதிகாரி அதே கடிதத்தை அதிமுக அலுவலகத்திற்கு மீண்டும் கஅனுப்பி உள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது என்றும் தேர்தல் அதிகாரி விளக்கமும் கொடுத்துள்ள நிலையில், அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர நினைத்த எடப்பாடி பழனிச்சாமி கனவில் மண் விழுந்தது போன்ற அமைந்துள்ளது. மேலும் தற்பொழுது நடக்கும் அடுத்தடுத்து நகர்வுகள் ஓபிஎஸ்க்கு சாதகமாக அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்..தமிழனுக்கு அவமானம்… பாஜக முக்கிய தலைவர் பேச்சு..