சமீபத்தில் அமைச்சர் கே என் நேரு, அவருடைய மகன், சகோதரர்கள் மற்றும் அவருடைய உறவினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள அமலாக்க துறை, விரைவில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்க இருக்கிறது அமலாக்க துறை.
இந்நிலையில் அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கதுறை மேற்கொண்ட சோதனைக்கு பின்பு, அண்ணாமலை போட்டு கொடுத்த ஸ்கெட்ச், அதன் படி எப்படி குஜராத்தில் இருந்து ஆட்களை இறங்கி அமைச்சர் கே என் நேரு மற்றும் அவருடைய சகாக்களை சிக்க வைத்தார்கள், என்கிற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. குறிப்பாக அமைச்சர் கே என் நேருவுக்கு நெருக்கமானவர்களால் தான் அவருக்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் கே என் நேருவுக்காக ஆப்பரேஷனை தொடங்கி இருக்கிறது அமலாக்கத்துறை, அதாவது அதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், அமைச்சர் கே என் நேரு குறித்த டேட்டாவை கொடுத்து இருக்கிறார் அண்ணாமலை, குறிப்பாக நகராட்சி துறையில் நடக்கும் ஊழல் மற்றும் கே என் நேரு அவருடைய உறவினருக்கு சொந்தமான நிறுவனங்கள் குறித்த மொத்த டேட்டா வையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஸாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அமலாக்க துறையின் குஜராத்தை சேர்ந்த அதிகாரிகளை கடந்த வருடம் அக்டோபர் மாதமே களம் இறக்கி இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். தங்களை தொழில் அதிபராக அறிமுகம் செய்து கொண்டு, நகராட்சி துறையில் காண்ட்ராக்ட் எடுக்க வேண்டும் என அமைச்சர் கே என் நேருவுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்க துறை அதிகாரிகள் முதலில் நெருங்கியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நகராட்சி துறையில் காண்ட்ராக்டர் எடுக்க எவ்வளவு கமிஷன் கொடுக்கப்பட வேண்டும், அந்த பணம் யாருடைய கைக்கு செல்கிறது என்கிற முழு தகவலையும் அமலாக்க துறை அதிகாரிகள் சேகரித்து வைத்து இருக்கிறார்கள். மேலும் கே என் நேரு சகோதரருக்கு சொந்தமான நிறுவங்களிலும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, அங்கே நடக்கும் பணப்பரிவர்த்தனை குறித்த தகவலையும் சேகரித்து வைத்து இருக்கிறார்கள் குஜராத்தில் இருந்து களம் இறங்கிய தங்களை தொழில் அதிபர்களாக காட்டி கொண்ட அமலாக்கதுறை அதிகாரிகள் என கூறப்படுகிறது.
மேலும் நகராட்சி துறையில் டெண்டர் எடுப்பதற்காக, ஹவாலா பணமாக யாரிடம் கொடுக்க வேண்டும், வாங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை எந்தந்த வங்கி கணக்குகளில் பணம் பரிமாறுகிறது என்கிற மொத்த தகவலையும், ஆடியோ வீடியோ ஆதாரத்துடன் சேகரித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது, தங்களை தொழில் அதிபர்களாக காட்டி கொண்டு குஜராத்தில் இருந்து களம் இறங்கிய அமலாக்கதுறை அதிகாரிகள் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சேகரித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கே என் நேரு மற்றும் அவருடைய சகோதரர், மகன் உட்பட உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறார்கள், அந்த வகையில் பக்கவா ஸ்கெட்ச் போட்டு, சுமார் 5 மாதங்களாக தங்களை தொழில் அதிபராக காட்டி கொண்டு நகராட்சி துறையில் டெண்டர் எடுக்க வேண்டும் என அமைச்சர் கே என் நேருவுக்கு நெருக்கமானவர்களிடம் நெருங்கிய குஜராத்தை சேர்ந்த அமலாக்க துறை அதிகாரிகள்.
அமைச்சர் கே என் நேருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவே மொத்த தகவலையும் சேகரித்து அதிரடி சோதனையை மேற்கொண்டு இருக்கிறார்கள், அந்த வகையில் அமைச்சர் கே என் நேருவுக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவே அவருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.