தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் ஒருபகுதியாக ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக ஊழல் பட்டியல் என்று கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ‘திமுக ஃபைல்ஸ்’ பாகம் ஒன்றை வெளியிட்டார். இதில் திமுக முக்கிய புள்ளிகளில் சொத்து பட்டியல் வெளியிட பட்டிருந்தது. அதே வருடம் ஜூலை மாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார் அண்ணாமலை.
அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் முறைகேடுகள் நடந்திருந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து அதே வருடம் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில், திமுக பைல்ஸ்-2′ ஆவணங்களை ஒரு பெரிய இரும்புப் பெட்டியில் வைத்து ஆளுநரிடம் வழங்கிய அண்ணாமலை.

திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என தெரிவித்து இருந்தார். அப்போது திமுகவினர் இதை கேலி கிண்டல் செய்தாலும், அந்த மிக பெரிய இருப்பு பெட்டி தான் தற்பொழுது நடந்து வரும் டாஸ்மாக் ஊழல் வெளிச்சத்துக்கு வர காரணம் என கூறப்படுகிறது.
அண்ணாமலை கொடுத்த அந்த ட்ரங்க் பெட்டியில் டாஸ்மாக் துறையில் நடக்கும் ஊழல் குறித்த பல ஆதாரங்களை சேகரித்து டாஸ்மாக் FILES என்கிற ஒரு FILES உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது டாஸ்மாத்துறையில் மது பாட்டில் கொள்முதல் தொடங்கி, விற்பனை முதல், அரசாங்கத்திற்கு கணக்கில் வரப்படாமல் பல கோடிகள் ஊழல் நடந்து வருவதாகவும், இதற்கு பின்னணியில் கரூர் கம்பெனி செயல்பட்டு வருவதாகவும்.
மேலும் குறிப்பாக இந்த பணம் எந்த வகையில் மணிலாண்டரி செய்யப்படுகின்றது என்கின்ற, மொத்த தகவலையும் அந்த ட்ரம் பெட்டிக்குள் இருந்த டாஸ்மாக் ஊழல் பைல்ஸ் என்கின்ற கோப்புகளில் அண்ணாமலை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த FILES ஆளுநர் மூலம் மத்திய உள்துறை அமைச்சரத்துக்கு இந்த தகவல் சென்றதும். மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் அமலாக்கத்துறைக்கு தகவல் பரிமாறப்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் அண்ணாமலை அந்த ட்ரங் பெட்டிக்குள் என்ன விஷயங்களை குறிப்பிட்டு இருந்தாரோ அது அத்தனையும் ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சுமார் 1000 கோடி ஊழல் டாஸ்மாக் மூலம் நடந்துள்ளது என அமலாக்க துறை அறிவித்துள்ள நிலையில் திமுக தரப்பில் இது பொய்யான குற்றசாட்டு என மறுக்க வில்லை.
மாறாக, திமுக தரப்பில் அமலாக்க துறை இது தொடர்பாக விசாரணை நடத்த கூடாது, மேலும் சோதனையில் கைப்பற்ற பட்ட ஆவணங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது திமுக அரசு. இந்நிலையில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் விவகாரம் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி மதுபான ஊழல் அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை நோக்கு சென்று, அரவிந்த் கெஜ்ரிவால் கைது வரை சென்றதோ, அதே போன்ற ஒரு நிலை தான் தற்பொழுது தமிழக டாஸ்மாக் ஊழலிலும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமலாக்க துறை கையில் சிக்கியுள்ள முக்கிய ஹார்ட் டிஸ்க் மூலம் டெல்லியில் நடந்தது போன்று கைது நடவடிக்கைகள் தமிழகத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.