கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே மிஷன் 200++ என வரும் 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று டார்கெட் செய்து வேலையை தொடங்கியது திமுக. இதற்காக ஐந்து மூத்த அமைச்சர்கள் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உதயநிதி ஸ்டாலின் முக்கிய ரோல் செய்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வரும் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு திமுக கூட்டணி கட்சிகள் மத்தியில் எந்த வித அதிருப்தியும் வந்துவிடக்கூடாது என தொடர்ந்து கூட்டணி கட்சியை தலைவர்களை சந்திப்பது என பல வேலைகளை செய்து வருகிறது இந்த 5வர். இந்த நிலையில் தற்போது தமிழக தேர்தல் கலவரம் முற்றிலும் மாறி உள்ளதால். தற்பொழுது திமுக 5வர் குழுவும் தன்னுடைய வியூகத்தை மாற்றி வருகிறது.

தற்பொழுது தொடர்ந்து திமுக மூத்த அமைச்சர்களையும், மூத்த தலைவர்களையும் அமலாக்கத்துறை மூலம் டார்கெட் செய்து வருகிறது பாஜக. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி இருவருடைய அமைச்சர் பதவியும் பறிபோகிறது, இப்படி மூத்த அமைச்சர்களை பாஜக டார்கெட் செய்து வரும் வேலையில், மறுபக்கம் இளைஞர் பெண்கள் வாக்குகளையும் கவரும் வகையில் டார்கெட் செய்து களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய்.
இப்படி திமுக மிகப்பெரிய ஒரு நெருக்கடியான ஒரு சூழலில் இருப்பது குறித்து 5வர் குழுவுக்கு தேர்தல் கள நிலவரம் குறித்து ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளது , அதாவது ஒரு தனியார் நிறுவனத்தை வைத்து தமிழக அரசியல் தேர்தல் நிலவரம் என்ன என்பது குறித்த முழு விவரத்தை கேட்டு அறிந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின், ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக வீக்காக இருந்து வருகிறது
அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த செந்தில் பாலாஜி என்கின்ற ஒரு தனி நபரை மட்டுமே திமுக நம்பி இருக்கிறது. ஆனால் செந்தில்பாலாஜி உடைய வழக்கு காரணமாக மிகப்பெரிய நெருக்கடியில் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இதையும் மீறி எந்த அளவுக்கு கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியால் தேர்தலில் கவனம் செலுத்த முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில் தற்பொழுது தென் மாவட்டங்களில் டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ் பாஜக இவர்களுடன் அதிமுகவும் கை கோர்ப்பதால் தென் மாவட்டங்களில் திமுக அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் திமுகவுக்கு பிறகு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இளைஞர் அணியினருக்கும் இடையில் உள்ள பிரச்சனைதான் என்ற ரிப்போர்ட்டும் உதயநிதிக்கு சென்று இருக்கிறது.
இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் கடந்த முறை வெறும் 24 தொகுதிகளில் திமுகவும், அதிமுக கூட்டணி 44 தொகுதிகளும் வெற்றி பெற்று இருந்த நிலையில், ததற்பொழுது அங்கே அதிக கவனம் செலுத்தி கொங்கு மண்டலத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
குறிப்பாக கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளில் தென் மாவட்டங்களில் 11 தொகுதிகள் ஒதுக்கியது திமுக, அதில் ஒன்பது தொகுதி காங்கிரஸ் வெற்றி பெற்றது, அந்த வகையில் கூட்டணி கட்சிகள் மத்தியில் எந்த ஒரு சலசலப்பு இல்லாமல் அவர்களுக்கு கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இம்முறை ஒதுக்கி கூட்டணி பலத்துடன் இறங்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது என்கிற ரிபோர்டும் உதயநிதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.