பாஜகவில் செந்தில் பாலாஜி சரண்டர்… டெல்லியில் நடந்த ரகசிய சந்திப்பு…

0
Follow on Google News

நீதிமன்றம் கொடுத்த கடும் நெருக்கடி காரணமாக செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு முதல்வருக்கு ஒரு ஆலோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். நீதிமன்றம் பெயில் ரத்து செய்தால் அந்த ரத்து செய்த ஆர்டருக்கு ஸ்டே வாங்கும் முயற்சியில் நாம் மேலும் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

அதற்குள் தேர்தலும் வந்துவிடும் ஆகையால் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் எந்த பிரச்சனையும் இல்லை என முதல்வரிடம் ஒரு தரப்பு ஆலோசனை வழங்கி இருக்கிறது. ஆனால் அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் இது போன்ற ரிஷ் எடுக்க வேண்டாம். தற்பொழுது மக்கள் இதுகுறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் ஊழல் அமைச்சருக்கு எதற்கு இந்த ஆட்சி இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்கின்ற விமர்சனம் மக்கள் மத்தியில் வரும். அந்த வகையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லுங்க பிறகு பார்த்துக்கலாம் என்று முதல்வர் தெரிவித்ததாகவும் இதனை தொடர்ந்தே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்ட போது செந்தில் பாலாஜிக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டு இருக்கிறது, காரணம் ஏற்கனவே போக்குவரத்து துறை ஊழலில் சுமார் 400 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் தனக்கு குறிவைக்கப்படுகிறது என்கின்ற ஒரு அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக்தில் நடந்த சோதனையின் போது, செந்தில் பாலாஜியிடம் நீங்கள் தைரியமாக இருங்க எல்லாம் பார்த்துக்கலாம் என்று அட்வைஸ் செய்திருக்கிறார் முதல்வர். ஆனால் செந்தில் பாலாஜி ஏற்கனவே 400 நாட்கள் சிறையில் இருந்தது போதும், மீண்டும் சிறைக்கு செல்ல அவருக்கு விருப்பமில்லை. அந்த வகையில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பாத்துக்க நேரடியாகவே களத்தில் இறங்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி.

இதனை தொடர்ந்து அவசர அவசரமாக செந்தில் பாலாஜி இரவு டெல்லி சென்றதற்கு முக்கிய நோக்கமே அவர் பாஜகவிடம் சரண்டராக தான் என்று கூறப்படுகிறது. அதாவது செந்தில் பாலாஜிக்கும் தொழிலதிபர் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வகையில் அதானி மூலமாக செந்தில் பாலாஜி பாஜகவுடன் திரை மறைவில் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

பாஜக அமைச்சர்கள் அல்லது பாஜக முக்கிய தலைவர்கள் முலம் பாஜக தலைமையிடம் தொடர்பு வைத்துக்கொண்டால், முதல் குடும்பத்துக்கும் தெரிந்துவிடும் என்பதால் தொழிலதிபர் அதாணி மூலமாக செந்தில் பாலாஜி பாஜக உடன் திரைமறைவில் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தன்னுடைய குடும்பத்தை தற்பொழுது காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக அவருடைய சகோதரர் அசோக் மீது செந்தில் பாலாஜி அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருப்பவர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தன்னுடை குடுமபத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செந்தில் பாலாஜி கொள்கைவாதி கிடையாது எந்த நேரத்திலும் எந்த கட்சிக்கு போகக் கூடியவர்.

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லிக்கு சென்ற செந்தில் பாலாஜி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தொழில் அதிபர் அதானி மூலம் பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்கிற ரகசிய முதல் குடும்பத்துக்கு இடியாய் விழுந்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here