ஏற்கனவே 5 கட்சி தாவி வந்த செந்தில் பாலாஜிக்கு, கொள்கை கிடையாது, கட்சியின் விசுவாசம் கிடையாது, அந்த வகையில் தன்னை காப்பாற்றி கொள்ள திமுகவுக்கு கல்தா கொடுத்து எந்த நேரம் வேண்டுமானாலும் வேறு ஒரு கட்சிக்கு தாவி விடுவார் செந்தில் பாலாஜி என்கிற விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் உண்டு, அதை உறுதி படுத்தும் வகையில் இருந்து வருகிறது செந்தில் பாலாஜி குறித்து வெளியாகும் தகவல்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது லஞ்சம் வாங்கியது தொடர்பாக அமலாக்கதுறையினரால் கடந்த வருடம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சம் வாங்கியதால் தான் கைது செய்யப்பட்டார், ஆனால் அப்போது ஒட்டு மொத்த திமுக கூடாரமும் ஆட்டம் கண்டது. காரணம் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்தாலும், தற்பொழுது திமுக ஆட்சி காலத்தில் நடக்கும் டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரித்து திமுக முதன்மை குடும்பத்தை லாக் செய்ய வேண்டும் என்பதே அமலாக்க துறையின் திட்டம் என கூறப்படுகிறது.

அதன் காரணமாக தான் எங்கே செந்தில் பாலாஜி அமலாக்க துறையில் நம்மை போட்டு கொடுத்து விடுவாரோ என்கிற அச்சத்தில் செந்தில் பாலாஜி நெஞ்சு வலிக்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, திமுக முதல் குடும்பத்தை சேந்த முதல்வர் உட்பட ஒவ்வொருவராக, மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை சந்தித்தனர். ,மேலும் செந்தில் பாலாஜி சுமார் ஒன்றரை வருடம் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு, அதற்கு முன்பு அவர் என்ன துறையில் அமைச்சராக இருந்தாரோ அதே துறையை வழங்கி அவர் மனதை குளிர வைத்தது திமுக முதல் குடும்பம்.
இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த செந்தில்பாலாஜி ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கும் சூழல் ஒரு பக்கம் உருவாகியுள்ள நிலையில், மறுப்பக்கம் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சமீபத்தில் நடந்த அமலாக்க துறை சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக செந்தில் பாலாஜி கைது செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே செந்தில் பாலாஜி சகோதரர் கடந்து ஒரு வருடத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்து வரும் நிலையில், தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உடகபட 13 பேர் மீது உள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்துக்கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் வரும் ஏப்.9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இம்முறை செந்தில் பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்வதர்க்கான பிடி வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது. இப்படி செந்தில் பாலாஜி அவருடைய சகோதரர் இருவரும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக காரணம், கொங்கு மண்டலத்தில் அழிவின் விழுப்பில் இருந்த திமுகவுக்கு உயிர் கொடுத்து புத்துணர்ச்சி கொடுத்தது தான் என பரவலாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே ஒன்றரை வருடம் சிறையில் இருந்தது போதும், இனியும் ஒரு குடும்பத்திற்காக தானும் தன்னுடைய தம்பியும் எதற்காக தியாகம் செய்ய வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டதாக கூறப்படும் நிலையில், தற்பொழுது தன்னை சுற்றி இருக்கும் வழக்கில் இருந்து தப்பிக்க மறைமுகமாக டெல்லி பாஜக உடன் பேசி வருவதாகவும், ஆனால் பாஜகவோ எங்கள் கையில் எதுவும் இல்லை அமலாக்க துறை சட்டப்படி செய்யப்படுவார்கள் என கைவிரித்து விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.மேலும் இந்த முறை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டால் தன்னை காப்பாற்றி கொள்ள முதல் குடும்பத்தை அமலாக்க துறையிடம் போட்டு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.