செந்தில் பாலாஜி சுமார் ஒன்றரை வருடம் சிறையில் இருந்த போது அவருடைய அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருந்ததால், அவருடைய ஜாமின் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தன்னுடைய அமைச்சர் பதவியை துறந்து தற்பொழுது தான் அமைச்சராக இல்லை, அதனால் ஜாமின் வழங்கும்படி செந்தில் பாலாஜி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஆனால் ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றது நீதிமன்றத்தை மிகப்பெரிய அளவில் கேலிக்கூத்தாக்கியது. அதுமட்டுமல்ல நீதிமன்றத்தை ஏமாற்றி செந்தில் பாலாஜி ஜாமின் வெளிவந்தார் என்கின்ற கோபம் ஜாமீன் வழங்கிய நீதிபதிகளுக்கு இருந்தது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால் அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்த வழக்கை, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய அதே நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள். அப்போது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறாரா.? இல்லையா.? என அவருடைய விருப்பத்தை மட்டும் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களிடம் நீதிபதி கடந்த முறை விசாரணையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ரத்து குறித்த விசாரணை வந்தபோது, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா.? இல்லையா.? என்பதை செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறார் என்று தெரிவித்துவிட்டால் உடனே அவருடைய ஜாமின் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகஇருந்தது.
இதனை தொடர்ந்து அமைச்சர் பதவியும் வேண்டும், ஆனால் சிறைக்கு போக கூடாது என்பதற்காக, இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞரான முகுல் ரொஹாங்கியை இரவோடு இரவாக சென்று டெல்லியில் சந்தித்து திரும்பினார் செந்தில்பாலாஜி. இந்த நிலையில் மீண்டும் இந்த வாக்கின் விசாரணையின் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா.? இல்லையா.? என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரொஹாங்கி தெரிவித்ததும் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று நீதிபதிகள் கண்டித்தனர்.
மேலும் இன்னும் பத்து நாட்களுக்குள் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார் நீதிபதிகள். இந்த நிலையில் இந்த வழக்கு தற்பொழுது உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறார் என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவிக்கும் பொழுது, செந்தில் பாலாஜியை ஜாமின் ரத்து செய்யப்பட்டு அவர் கைது செய்யப்படுவது உறுதி என்கிறனர் சட்ட வல்லுநர்கள்.
அதே நேரத்தில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை துறந்து ஜாமீன் வாங்கி வெளியே வந்த பின்பு, அடுத்த இரண்டு நாட்களில் அமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு விபூதி அடித்த செந்தில் பாலாஜிக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் தற்பொழுது செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், இனி எங்கள் கையில் எதுவும் இல்லை, நீங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள், இல்லையென்றால் உங்கள் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறை செல்ல நேரிடும் என செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் கைவிரித்து விட்ட நிலையில், கண் கலங்கி மிக பெரிய அச்சம் கலந்த குழப்பத்தில் செந்தில் பாலாஜி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.