கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கிய தருவதாக லஞ்சம் வாங்கியது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
ஆனால் ஜாமீன் வழங்கிய அடுத்த இரண்டு நாட்களிலேயே செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்று கொண்டதால், அவருக்கு எதிரான இந்த வழக்கில் சாட்சி சொல்வதற்கு சாட்சிகள் தயங்குகிறார்கள். அதனால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற மனு தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா.? இல்லையா என்று நீதிபதிகள் திட்டவட்டமாக எஸ் or நோ என்று மட்டும் சொல்லுங்கள் என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது . இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரொஹாங்கி, செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாதிட்டார். அப்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் முதல் பிரதிவாதியாக தமிழக அரசுக்கு தான் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
எனது கட்சிக்காரரான இரண்டாவது பிரதிநிதியான செந்தில் பாலாஜிக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்ப வில்லை என்றும், இதனால் எனது கட்சிக்காரரான செந்தில் பாலாஜிக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்ற முகுல் ரொகாப்தி வாதித்த போது, கடுமையான கோபத்திற்கு உள்ளான நீதிபதி அபய் ஓகா, நாங்கள் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை என்றால், இதற்கு முன்பு நடந்த வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக எப்படி நீங்கள் ஆஜராகி வாதாடினீர்கள் என்று கிடக்குப்பிடியாக கேள்வியை கேட்ட நீதிபதி.
இந்த டெக்னிக்கல் விஷயங்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என கடுமையாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரை எச்சரித்த நீதிபதி, பல வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு இந்த வழக்கை நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் பத்து நாட்களுக்குள் நீங்கள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும், இதுதான் உங்களுக்கு இறுதி வாய்ப்பு என்று மிக கடுமையாக எச்சரித்து செந்தில் பாலாஜியின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
அந்த வகையில் செந்தில் பாலாஜி அமைச்சராக விரும்புகிறாரா.? இல்லையா.? என்பதை ஏப்ரல் முதல் வாரத்திற்குள் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த வகையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார் என்று தாக்கல் செய்தால் அவருடைய ஜாமின் உடனே ரத்து செய்யப்பட்டு அன்றே கைது செய்யப்பட்டு செந்தில்பாலாஜி திகார் சிறையில் அடைக்கப்படலாம் என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது.
மேலும் செந்தில் பாலாஜி விவகாரத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்து நீதிபதிகளிடம் விளையாட்டு போக்கை காட்டி வருவது நீதிபதிகளை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கி வருவதால், செந்தில் பாலாஜிக்கு பாதகமான சூழல் தான் இந்த வழக்கின் நிலவரம் உள்ளது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.