டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பண மூட்டைகள் சிக்கிய விஷயம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. பொதுவாகவே இந்தியாவில் நீதி விலைக்கு வாங்க படுகிறதா என்றால், ஒட்டு மொத்த நீதி துறையையும் அப்படி சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்பு நடந்து ஒரு சில சம்பவங்களை வைத்து பார்க்கும் பொழுது, பணம் படைத்தவர்கள் தப்பிக்க நீதியை கூட விலைக்கு வாங்க தயங்கமாட்டார்கள் என்பதை மறுக்க முடியாது.
அதாவது மிக பெரிய ஊழல், அல்லது மோசடியில் சிக்கியுள்ளவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடும் மிக பெரிய வழக்கறிஞர், இந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக இல்லை, அதனால் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பணம் கொடுத்து சரி செய்யலாம் என இடை தரகர் போன்று செயல்பட முயற்சித்தாக கேரளா உயர்நிதிமன்றத்தில் ஒருவர் சிக்கிய சம்பவமும் கடந்த காலத்தில் அரங்கேறியது.

இந்த நிலையில் தற்பொழுது டெல்லியில் நீதிபதி வீட்டில் கட்டு காட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ள நிலையில், வட மாநிலங்களில் என்ன நிகழ்வு நடந்தாலும், அதை அரசியல் செய்யும் திமுக , நீதிபதி வீட்டில் பணம் சிக்கியுள்ள விவகாரத்தில் அமைதியாக இருந்து வருவதின் மர்மம் என்ன என்கிற சந்தேகம் அரசியல் களத்தில் திமுகவை நோக்கி எழுந்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி பலவேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, எந்த நேரமும் அவர் சிறை செல்லலாம் என்கிற சூழல் உருவாகியுள்ள நிலையில், செந்தில்பாலாஜி வழக்குக்கும் தற்பொழுது கட்டு காட்டாக பணம் கைப்பற்ற விவகாரத்தில் சிக்கியுள்ள டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு தொடர்பு இல்லை என்றாலும் கூட, நீதியை விலைக்கு வாங்க செந்தில் பாலாஜி தரப்பு முயற்சிது வருகிறதா.?
அதனால் தான், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் சுமார் 100 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றியது குறித்து வாய் திறக்காமல் திமுக தரப்பு அமைதியாக இருந்து வருகிறதா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு காட்டாக பணம் சிக்கப்பட்டுள்ள விவகாரம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி, யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் அலகாபாத்தில் உள்ள பார் அசோசிஷன், அலகாபாத் நீதிமன்றம் என்ன குப்பையா, தவறு செய்த நீதிபதியை எங்கள் நீதிமன்றத்துக்கு அனுப்பி வந்தால், அலகாபாத் நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் கேரள உயர்நிதிமன்றம், கர்நாடக உயர்நிதிமன்றம் இன்னும் பல மாநிலத்தில் உள்ள பார் அசோசிஷன் அவரவர் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மாவை மாற்றி விட வேண்டாம் என டெல்லி சென்று முறையிட்டதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் இருந்து யாருமே செல்ல வில்லை என கூறப்படும் நிலையில், ஆளும் திமுக அரசு தமிழகத்தில் இருந்தும் அனுப்பி இருக்க வேண்டும், அப்படி அனுப்பாததால் சந்தேகம் எழுகிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பும் நீதியை விலைக்கு வாங்கி தப்பித்து விடுவதர்க்கான வேலையை செய்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு காட்டாக பணம் சிக்கிய விவகாரம்.. இந்தியா முழுவதும் உள்ள ஒட்டு மொத்த நீதி துறையும் அலர்ட் ஆகியுள்ளதால், இனி செந்தில் பாலாஜி தரப்பு நீதியை விலைக்கு வாங்கி விடலாம் என்கிற முயற்சியில் கூட ஈடுபட முடியதா சூழல் உருவாகியுள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.