அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக ஆஜரான இந்தியாவின் தலை சிறந்த வழங்கறிஞர் என்று அழைக்கப்படும் வழக்கறிஞர் முகுல் ரொஹாங்கி, வடிவேலு நகைச்சுவை காட்சியில் வரும் வக்கீல் வண்டுமுருகன் காமெடி போன்று அமைந்துவிட்டது, அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய விதம். மேலும் செந்தில் பாலாஜி தரப்பு வழங்கறிஞர் வாதாடிய விதம், மேலும் செந்தில்பாலாஜியை சிக்கலில் சிக்க வைத்து விட்டது.
செந்தில் பாலாஜி ஜாமின் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு இரவோடு இரவாக டெல்லி சென்ற செந்தில் பாலாஜி, அங்கே வழக்கறிஞர் முகுல் ரொஹாங்கியை சந்தித்தார். இதனை இந்தியாவின் தலை சிறந்த வழக்கறிகர் செந்தில்பாலாஜிக்கு ஆஜராக போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் அதிகரிக்க.

ஏற்கனவே செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா.? இல்லையா என்கிற கேள்விக்கு செந்தில்பாலாஜி தரப்பு பதில் சொல்ல வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “தற்போது செந்தில் பாலாஜி என்ன நிலையில் இருக்கிறாரோ, அதே நிலையில் அவர் தொடர விரும்புகிறார்” என தெரிவித்தார்.
அதாவது செந்தில் பாலாஜி தற்பொழுது அமைச்சராக தொடர்வதால், அதே நிலையில் தொடர விரும்புகிறார் என்பதை தான் செந்தில் பாலாஜி வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து வழக்கின் மீது உங்களது வாதங்களை முன் வையுங்கள்’ என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு, `வாதங்களை முன் வைப்பது தொடர்பாக தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார் செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரொஹாங்கி. இதை கேட்டதும் கோபமடைந்த நீதிபதிகள், `சம்பந்தப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கின் விசாரணைக்காக செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி வருகிறார்.
அப்படி இருக்கும்போது நோட்டிஸ் அனுப்பாமல் எப்படி ஆஜராகி வருகிறார். மேலும் இந்த வழக்கை விசாரிப்பதற்காகத்தான் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டிருக்கும் போது, அதை புரிந்து கொள்ளாமல் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என நீதிபதிகள் கோபத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, அடுத்து பேசிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, `தனது செயல்பாட்டிற்காக மன்னிப்பு கேட்பதாகவும், தனது வாதங்களை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், `செந்தில் பாலாஜி தரப்புக்கு தாங்கள் தெரிவித்த தங்களது கருத்துக்களும் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும்’ என கூறியதோடு வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு செந்தில் பாலாஜி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டபோது, `நீங்கள் சொல்லும் தேதியில் எல்லாம் ஒத்தி வைக்க முடியாது’ எனக்கூறி வழக்கின் விசாரணையை ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ம் தேதி செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்குள், செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், அல்லது அவர் ஜாமின் ரத்து செய்து சிறையில் அடைக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.