செந்தில்பாலாஜி விவகாரம் … முதல்வர் செய்த மிக பெரிய தவறு… எல்லை மீறி போன விஷயம்…

0
Follow on Google News

திமுகவை பொருத்தவரை தற்பொழுது ஒரு சோதனையான காலகட்டத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். காரணம் இதற்கு முன்பு திமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டாலும். உங்களால் திமுகவினர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா.? சாட்சி இருக்கா.? என்று சவால் விட்டு பேசி வருகின்றவர்கள் தான் திமுகவினர்.

குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷன் குறித்து எதிர்க்கட்சிகள் எப்போது வாய் திறந்தாலும், அந்த குற்றத்தை நிரூபிக்க முடிந்ததா.? சாட்சி இருந்ததா.? என்று சவால் விடும் தோரணையில் பேசுவார்கள் திமுகவினர். அந்த வகையில் தங்களை புனிதராக காட்டிக் கொண்டு வரும் திமுக விற்கு தற்பொழுது சோதனை காலம் என்று சொல்லும் வகையில் ஒரே நாளில் நான்கு வழக்குகள் திமுகவுக்கு எதிராக நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், உயர் நீதிமன்றத்தில் மூன்று வழக்கும் விசாரணை நடைபெற்றது. ஆனால் இந்த வழக்குகள் அனைத்துமே விசாரணை முடிவில் திமுகவுக்கு எதிராகவே அமைந்தது. அந்த வகையில் சமீப காலமாகவே திமுக வினர் தொடர்பான வழக்குகள் எல்லாமே நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக , குறிப்பாக நீதிமன்றத்தின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இப்படி தினமும் நீதிமன்றத்தில் திமுக தரப்புக்கு எதிரான வழக்குகளை பொருத்தமட்டில் திமுக தரப்பு பலவீனம் ஆகி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதில் செந்தில் பாலாஜி வழக்கை பொறுத்தவரை இதுவரை, எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர் வழக்கில் இந்த அளவுக்கு நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறது நீதிமன்றம்.

குறிப்பாக செந்தில் பாலாஜி ஜாமின் வழக்குக்கு எதிரான வழக்கில் நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள் என்ற வார்த்தைகள் எல்லாம் நீதிமன்றம் பயன்படுத்தி இருக்கிறது. அதாவது செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் போது அவருடைய தரப்பில் இருந்து செந்தில் பாலாஜி வெறும் சாதாரண மனிதர் தான், ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் , அமைச்சர் கூட கிடையாது என்கின்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி ஜாமீன் பெற்றார்கள்.

அந்த வகையில் அமைச்சர் இல்லை என்று குறிப்பிட்டதை நம்பி வெறும் சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காக ஜாமின் வழங்கி இருந்தோம் என்பதை சுட்டி கட்டியுள்ள நீதிமன்றம். அதே நேரத்தில் இதுவரை அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் இப்படி ஒரு ஜாமீன் கொடுக்காத வகையில் முன்மாதிரியாக ஒரு ஜாமீன் செந்தில் பாலாஜிக்கு கொடுத்தோம், அதுவே தற்பொழுது தவறாக முடிந்துவிட்டது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த விஷயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் என்று தான் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். காரணம் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து விடுதலையான போது, உடனே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல், இந்த வழக்கு முடியட்டும், செந்தில் பாலாஜி பொறுமையாக இருக்கட்டும் என்று முதல்வர் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டிருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் பெரிதாய் இருக்காது.

குறிப்பாக நீதிமன்றதில் திமுக இந்த அளவுக்கு அவமானப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது, இந்த நிலையில் தற்பொழுது செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், அவருடைய ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறை செல்ல நேரிடும் சூழல் ஏற்படும், அந்த வகையில் செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து அமைச்சர் ராஜினாமா செய்தாலும் அது மக்கள் மத்தியில் திமுகவுக்கு மிகப்பெரிய அவமானத்தை தான் பெற்றுக் கொடுக்கும் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here