பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சவுக்கு சங்கர். மேலும் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது, அதில் ஒரு வழக்குக்காக மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் ஆஜரான வந்த போது, பெண்கள் துடைப்பு கட்டை, செருப்பை கையில் ஏந்தி சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதில் சவுக்கு சங்கர் வந்த வாகனம் மீது பெண்கள் செருப்புகளை எரிந்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதற்கிடையே சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் தேனி போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சவுக்கு சங்கர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளளப்பட்டது.
அதாவது சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகம் இரண்டிற்கும் சீல் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் போலீசார்.
சென்னையில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் ஒரு பக்கம் போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு வந்த நிலையில், மறுப்பக்கம், பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யபட்டு கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்திருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி கோதண்டராஜ் முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
சென்னை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராக இருப்பது தெரிந்து, அங்கு பெண்கள் துடைப்பை கட்டை, செருப்புடன் வந்து சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரிடம் நடந்த விசாரணையில் இனிமேல் யூ டியூப்பில் தவறான தகவல்களை வெளியிட மாட்டேன்’ என சவுக்கு சங்கர் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட சுமார் 4 மணி நேரம் சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் வழக்கு விசாரணை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு சவுக்கு சங்கர் கோயம்புத்தூருக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் வழக்கறிஞர், இனிமேல் யூடியூப்பில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என நீதிபதியிடம் சவுக்கு சங்கர் தெரிவித்ததாகவும் மேலும் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட மாட்டேன் எனவும் நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் தெரிவித்தாக பேசினார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் இனிமேல் தவறான தகவலை வெளியிட மாட்டேன், யார் மனதையும் புண்படும் வகையில் பதிவு செய்யமாட்டேன் என சவுக்கு சங்கர் கதறும் நிலைக்கு சென்றுள்ளது, இனிமேலாவது சவுக்கு சங்கர் திருந்தி வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.