Prime ஏரியாவில் ஆடம்பர வீடு… 15 வேலை ஆட்கள்… சவுக்கு சங்கருக்கு இத்தனை கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது.?

0
Follow on Google News

பெண் போலீசாரை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை மதுரை நீதிமன்றம் அழைத்து வந்த போது, அவர் கையில் கட்டு போட்டிருந்தது சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டாரா.? என்கிற விவாதம் அனல் பறந்து வருகிறது. இப்படி சவுக்கு சங்கர் கைதுக்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் சவுக்கு சங்கருக்கு ஆதரவு தெரிவித்து வரும் பலரும் கூட, சவுக்கு சங்கர் பெண் போலீசாரை இழிவு படுத்தும் விதத்தில் பேசியது தவறு தான், அப்படி பேசியதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சவுக்கு சங்கர் பின்னணி குறித்து பல தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், சங்கர் பின்னணியில் முழுக்க முழுக்க அதிமுக இருப்பதாகவும், சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டு கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வழக்கறிஞர்கள் தான் சவுக்கு சங்கருக்கு ஆஜரானதாக தெரிவித்த பத்திரிக்கையாளர் பாண்டியன், மேலும் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே சவுக்கு சங்கரின் உறவினர்களிடம் சவுக்கு சங்கரை கண்டித்து வைக்குமாறு அரசு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டதாகவும்.

அப்போது உறவினர் சவுக்கு சங்கரை புத்தி மதி சொல்லி அட்வைஸ் செய்த போது, சவுக்கு சங்கர் உங்க வேலையை நீங்க பாருங்கள், என்னுடைய வேலையை நான் பார்க்கிறேன் என தெரிவித்து விட்டு, புத்திமதி சொல்லியும் சவுக்கு சங்கர் கேட்கவில்லை என தெரிவித்த பாண்டியன், மேலும் சவுக்கு சங்கருக்கு இரண்டு காரு இரண்டு டிரைவர் என அலுவலகம் என சுமார் 15 பேர் அவரிடம் வேலை பார்ப்பதாக தெரிவித்த பத்திரிகையாளர் பாண்டியன்.

வேலை ஆட்கள் ஒரு நபருக்கு சராசரியா சம்பளம் 50,000 எனவும் சுமார் 15 நபர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாய் சம்பளம் மட்டுமே மாதம் ஆகும். அப்படி இருக்கையில் சவுக்கு சங்கருக்கு இந்த பணமெல்லாம் வருவதற்கு பின்னணி என்ன என்கின்ற சந்தேகத்தை கிளப்பும் பத்திரிகையாளர் பாண்டியன், உறுதியாக இந்த பணம் சவுக்கு சங்கருக்கு சட்ட விரோதமாக தான் வருகிறது எனவும், குறிப்பாக சவுக்கு சங்கர் மணல் கொள்ளை பற்றி பேச மாட்டார்.

மேலும் கட்டுமான பணி நிறுவனங்கள் குறித்தும் பேச மாட்டார். பல கட்டுமான நிறுவனங்கள் புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு கட்டிடங்கள் கட்டி விற்கப்படுவது குறித்தெல்லாம் சவுக்கு சங்கர் ஆதாரத்துடன் பேச மாட்டார். காரணம் இப்படி பேசக்கூடாது என்பதற்காகவே சவுக்கு சங்கருக்கு பணம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது என சந்தேகத்தை கிளப்பிய பத்திரிக்கையாளர் பாண்டியன்.

மேலும் நான் பலமுறை சவுக்கு சங்கருக்கு அட்வைஸ் செய்ததாகவும் அந்த பெண்களை இழிவு படுத்த வேண்டாம் அது பத்திரிக்கை துறையில் உள்ள பெண்களாக இருந்தாலும் சரி போலீஸ் துறையில் இருந்த பெண்களாக இருந்தாலும் சரி அவர்களை இழிவு படுத்த வேண்டாம், நியாயமாக இரு ஒரு ஊடக தர்மத்தோடு இரு என அட்வைஸ் செய்ததாக தெரிவித்த பாண்டியன். மூன்றாவது மனைவிக்கு சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு சென்னையில் சவுக்கு சங்கர் வீடு வாங்கி கொடுத்ததாக செய்திகள் வருகிறது என தெரிவித்த பத்திரிகையாளர் பாண்டியன்.

தனக்கு வந்த source யிடம் , எப்படியா மூன்று கோடி ரூபாய்க்கு சவுக்கு சங்கர் வீடு வாங்கி இருப்பார் என சந்தேகத்துடன் பத்திரிகையாளர் பாண்டியன் கேட்டதாகவும், அதற்கு பட்டா சிட்டா என அனைத்தும் உள்ளது பிரைம் ஏரியாவில் தன்னுடைய மூன்றாவது மனைவிக்கு 3 1/2 கோடி சவுக்கு சங்கர் வீடு வாங்கி கொடுத்துள்ளார் என தன்னிடம் சோர்ஸ் தெரிவித்ததாக பகீர் தகவலை கிளப்பியுள்ளார் பத்திரிக்கையாளர் பாண்டியன்.