2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திமுக உட்கட்சி பூசல் உச்ச கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக திமுகவில் முதல் குடும்பத்தினருக்குள் அதிகார போட்டி தொடர்ந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில், மு க ஸ்டாலின் – மு க அழகிரி இவர்கள் இருவருக்கு இடையில் இருந்த அதிகார போட்டி.
அதனைத் தொடர்ந்து கருணாநிதி குடும்பத்திற்கும் – மாறன் குடும்பத்திற்கும் இருந்த அதிகார போட்டி, அதனைத் தொடர்ந்து திமுக தலைமைக்கு பொறுப்பிற்கு மு க ஸ்டாலின் வந்ததும், உதயநிதி ஸ்டாலினுக்கும் – கனிமொழிக்கும் இடையில் நடந்த அதிகார போட்டி, தற்பொழுது முதல்வர் குடும்பத்திற்குள்ளேயே உதயநிதி ஸ்டாலினுக்கும் – சபரீசனுக்கும் இடையிலான அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையில் நடந்த அதிகாரப்போட்டி தற்பொழுது உதயநிதி ஸ்டாலினுக்கும் – சபரீஷனுக்கும் நடந்து வருவதால் இதை வேடிக்கை மட்டும் பார்த்து சாதுர்யமாக அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் கனிமொழி. வரும் 2026 தேர்தலில் திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்று கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் திமுகவில் இருக்கிற மூத்த தலைவர்கள் தனக்கு மரியாதை தர வில்லை என்றும், மூத்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் ஏதாவது சொன்னால் எதுவாக இருந்தாலும் நாங்கள் அப்பாவிடம் பேசிக் கொள்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலினை உதாசினப்படுத்திவதாக கூறப்படுகிறது. மேலும் திமுக மூத்த தலைவர் துரைமுருகனுக்கு, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தது விருப்பம் இல்லை.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று முதல்வர் முடிவு செய்தபோது, இரண்டு துணை முதல்வர்களை கொண்டு வாருங்கள், அதில் தனக்கும் ஒரு துணை முதல்வர் வேண்டும் என்று துரைமுருகன் காய்களை நகர்த்தியதாகவும், அதற்கு முக சலின், உங்களுக்கு துணை முதல்வர் தருகிறோம் தங்கள் கைவசம் இருக்கும் கனிம வளத்துறையை விட்டுக் கொடுங்கள் என்று கேட்டதும்,
எனக்கு துணை முதல்வர் வேண்டாம், கனிமவளத்துறையை போதும் என்று துரைமுருகன் தெரிவித்ததாகவும், ஆனால் தற்போது அவர் கைவசம் இருந்த கனிம வள துறையும் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதற்கு துரைமுருகன் அதிருப்தி தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது க முதல்வரின் மருமகனாக இருந்தாலும் கூட கட்சியில் அதிகாரமிக்க பதவி இல்லாததால் கட்சிக்காரர்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் தனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் தனக்கு கட்சியில் அதிகாரமிக்க பதவி வேண்டும் என்று காய்களை நகர்த்தி தொடங்கி இருக்கிறார் சபரீசன் என கூறப்படுகிறது.
ஆனால் தனக்கு போட்டியாக சபரீசன் உருவெடுக்க தொடங்கிவிட்டார் என்கின்ற அதிருப்தியில் உதயநிதி இருப்பதாக கூறப்படுகிறது, இருந்தாலும் ராஜசபா எம்பி காண காய்களை சபரீசன் நகர்த்தி வருவதால் அவர் ராஜ சபா எம்பியாகும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் சபரீசனுக்கு தொடர்புடைய பெண் நிறுவனம் தான் வேட்பாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில்.
உதயநிதி ஸ்டாலின் குறைந்தது 100 தொகுதிகளில் தான் தேர்வு செய்யப்படக்கூடிய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது திமுகவுக்குள் நடக்கும் அதிகார போட்டியில் உதயநிதி ஸ்டாலினுக்கும் சபரீசனுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது