டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக்கின் தலைமை அதிகாரி விசாகனிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையை தொடர்ந்து, டாஸ்மாக் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் சங்கீதா, ஜோதி சங்கர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கி இருக்கிறது, இந்த விசாரணையில் பல தகவல்களை அமலாக்கத்துறை சேகரித்து வருகிறது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த விவகாரம் மிக தீவிரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த டாஸ்மாக் ஊழலிலிருந்து தப்பிப்பதற்காக நீதிமன்றம் சென்று பல மனுக்களை தாக்கல் செய்து தடை வாங்கிவிடலாம் என்று ஆளும் திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் சட்டரீதியாக அமலாக்கத்துறை முறியடித்து இந்த விசாரணையை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்வதற்கு முன்பே, டாஸ்மாக் மூலம் எந்த மாதிரியான ஊழல் நடக்கிறது, இந்த பணம் எப்படி.? யார் மூலம் முதலீடு செய்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார்கள் .?என்கின்ற முழு விவரமும் பிரதமர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போது பிரதமர் நேரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
அதாவது இந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும்.? எவராக இருந்தாலும்.? எக்காரணத்தைக் கொண்டு தப்பித்து விடக்கூடாது. உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கின்றேன். இதில் மாற்ற எந்த அமைச்சகத்தின் தலையீடு இருக்காது. இந்த விசாரணையை நீங்கள் எதை நோக்கி செல்ல வேண்டும்.? யாரை நோக்கி செல்ல வேண்டும் என்ற திட்டமிட்டுள்ளீர்களோ அவர்களை நோக்கி இந்த விசாரணை எடுத்து செல்லுங்கள்.
வரும் 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்குள் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற உத்தரவு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அமலாக்க துறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு உதயநிதி நண்பரான ரத்தீஷ் யிடம் அமலாக்கத்துறை நெருங்கும் பொழுது அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டார்.
ஆனால் அமலாக்கத்துறை கையில் வலுவான ஆதாரம் இருப்பதால் ரத்தீஷ் எங்கே தப்பிச் சென்றாலும் அமலாக்க துறை விடுவதாக இல்லை. இந்த நிலையில் ரதீஸ் க்கு அமலாக்கத்துறை தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பபட இருக்கிறது . அப்படி நோட்டீஸ் அனுப்பியும் ரத்தீஷ் ஆஜராகாத பட்சத்தில் இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாட இருப்பதாகவும், அதற்கு தேவையான உதவிகளை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாடு தப்பி சென்றுள்ள ரத்தீஷ் எங்கே இருக்கிறார் என்பதையும் கண்டுபிடித்து மத்திய உளவுத்துறை தீவிரமாக அவரை நோட்டமிட்டு வருவதாகவும், விரைவில் இன்டோர் போல் உதவியுடன் ரத்தீஷ் கைது செய்து இந்தியா அழைத்து வந்து அவரிடம் அமலாக்க துறை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக டெல்லியில் இருந்து வெளியாகும் தகவல் உறுதி படுத்துகிறது.
இந்நிலையில் இன்டர்போல் மூலம் ரதீஸ் கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், வெளிநாட்டில் எங்கே இருந்தாலும் தட்டி தூக்கி விடுவார்கள் என்பதால், எதார்க்கு ரிஸ்க் என அமலாக்க துறை சம்மன் அனுப்பினால் ரத்தீஷ் நேரடியாக ஆஜராகவும் வாய்ப்பு இருக்கிறது, அப்படி ஆஜரானால் உதயநிதிக்கு மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றும், அந்த வகையில் டாஸ்மாக் ஊழலில் அமலாக்க துறை உதயநிதியை நெருங்கி விட்டது என்கிறது டெல்லி வட்டாரங்கள் .