எடப்பாடி பழனிசாமியை நம்பியவர்களை முதுகில் குத்துவது அவருக்கு கை வந்த கலை, சசிகலா காலில் தவழ்ந்து சென்று விழுந்து முதல்வர் பதவியை பெற்று, சசிகலாவுக்கு துரோகம் செய்த எடப்பாடி, பின்பு ஓபிஎஸ் முதுகில் குத்தி அதிமுகவில் இருந்து வெளியேற்றிய எடப்பாடி, இதில உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமிக்கு பக்கம் பலமாக இருந்த பாஜக முதுகில் குத்திய எடப்பாடி, தற்பொழுது பிரேமலதா விட தன்னுடைய வேலையை காட்டி இருக்கும் சம்பவம் தான் அரசியலில் டாப் டாப்பிக்காக உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என அதிமுக தொண்டகர்ளை ஏமாற்றி தக்க வைத்து வந்த எடப்பாடி உடன் யாருமே கூட்டணிக்கு வரவில்லை, முதல் நாள் இரவு வரை அதிமுக உடன் கூட்டணிக்கு வருவதாக பேச்சுவார்த்தை நடந்தி வந்த பாமக, அடுத்த நாள் காலையில் பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றது. இப்படி யாருமே கூட்டணிக்கு வராமல், அனாதையாக நின்றார் எடப்பாடி பழனிச்சாமி.

அப்படி ஒரு சூழலில் பாஜக கூட்டணிக்கு செல்ல தயாராக இருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம், உங்களுக்கு ராஜசபா சீட் ஒன்று தருகிறோம் என்று மண்டையை கழுவி தேமுதிகவை ஒரு வழியாக கூட்டணிக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி, மேலும் அந்த கலகட்டத்தில் விஜயகாந்த் மறைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்த அனுதாபம், அந்த தேர்தலில் ஒரு அளவுக்கு கை கொடுத்தது.
அதிமுக போட்டியிட்ட தொகுதிகளில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்து, 17 தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், தேமுதிக கூட்டணிக்கு வரவில்லை என்றால், இதை விட கேவலமான ஒரு தோல்வியை சந்தித்து இருப்பார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறது அரசியல் வட்டாரங்கள். அந்த வகையில் கூட்டணிக்கு யாரும் வராமல் அனாதையாக நின்று கொண்டிருந்த எடப்பாடி, ராஜசபா சீட் தருகிறேன் என்று சொன்னதும் கூட்டணிக்கு சென்றார் பிரேமலதா.
ஆனால் தற்பொழுது ஒரு ராஜசபா சீட்டுக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை, தற்பொழுது அதிமுக கைவசம் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர், அதனால் ஒரே ஒரு ராஜசபா அதுவும் அதிமுவுக்கு தான் என, பிரேமலதாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் முதுகில் குத்தும் வேலையை செய்ய தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
அதே நேரத்தில் மறைந்த விஜயகாந்த க்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருந்து வழங்கி கவுரவ படுத்திய பாஜக உடன் கூட்டணி அமைக்காமல், முதுகில் குத்துவதில் முதுகலை பட்டம் பெற்ற எடப்பாடியை நம்பி சென்ற பிரேமலதாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என விமர்சனம் எழுந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் ராஜசபா எம்பி தேமுதிகவுக்கு தருகிறோம் என்று சொல்லவே இல்லை என ஒரே போடாக போட்டார்.
இதற்கு பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றால் ஒரு ராஜசபா சீட் தருகிறோம் என எடப்பாடி தரப்பு ஒப்பந்தம் செய்தார்கள் என பதில் அளித்தார். இதனை தொடர்ந்து எடப்பாடி இமேஜ் மிக பெரிய அளவில் டேமேஜ் ஆனது, இதனை தொடர்ந்து அடுத்தடுத்து எடப்பாடிக்கு எதிராக அஸ்திரத்தை கையில் எடுக்க போகிறோம் என எடப்பாடிக்கு தகவல் அனுப்பி இருக்கிறார் பிரேமலதா.
என்னடா இது ஏற்கனவே, இரட்டை இலை முடக்கும் சூழலில் உள்ளது, அடுத்து செங்கோட்டைன் தனக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கிறார், இதில் பிரேமலதா ஒரு பக்கம் நமக்கு எதிராக திரும்பினால் என்ன செய்ய என்று, உடனே எடப்பாடி தரப்பு பிரேமலதா தம்பி சுதீஷ் க்கு போன் போட்டுள்ளது, அதில் எங்களுக்கு எதிராக அக்காவ எதும் பேச வேண்டாம் என்று சொல்லுங்க, எல்லாம் பேசிக்கலாம் என்று காலில் விழாத குறையாக தொலைபேசியில் கெஞ்சியிருக்கிறது எடப்பாடி தரப்பு.
அதற்கு சுதீஷ், உடனே எடப்பாடியை இது குறித்து பிரஸ் மீட் கொடுக்க சொல்லுங்க, அக்கா உங்களுக்கு எதிரான நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பார் என்று சுதீஷ் தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து நாங்கள் பொறுமையாக இருங்க என்று தான் சொன்னோம், ராஜசபா சீட் இல்லை என்றல்லாம் சொல்லவே யில்லை என்று பிரேமலதாவிடம் சாஷ்டங்கமாக விழுவது போன்று அந்தர் பல்டி அடித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.