திமுகவை பிடிக்காதவர்களுக்கு கூட முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை பிடிக்கும், இதற்கு முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் ஒரு முதல்வர் மருமகள் என்கிற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், அதே போன்று தற்பொழுது முக ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போதும் முதல்வர் மனைவி என்கிற பந்தா இல்லாமல் ஒரு சாமானிய பெண் போன்று தான் வளம் வருகிறார் துர்கா ஸ்டாலின்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட துர்கா ஸ்டாலின், அதிகம் ஆன்மீக தளத்தில் தான் தென்படுவர், அந்த வகையில் திமுக கொள்கையில் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு என்றெல்லாம் இருந்தாலும் கூட, அப்படி திராவிட கொள்கையை தாங்கிபிடிக்கும் திமுகவின் பாரம்பரிய குடும்பதில் இருந்து வந்தாலும், துர்கா ஸ்டாலின் போன்று ஒரு கடவுள் பக்தி கொண்டவர்கள் மாற்று கட்சியில் கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் அவர் போகாத கோவிலே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் திமுகவினர் யாராவது இந்து கடவுள், மற்றும் அவர்களின் நம்பிக்கையை கேலி செய்தால் எதிர்க்கட்சியினர் எழுப்பும் முதல் கேள்வி, இதற்கு கோவில் கோவிலாக செல்லும் துர்கா ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார் என்று தான் கேள்வி எழுப்புவார்கள், அந்த வகையில் துர்கா ஸ்டாலின் அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட அவருடைய பெயர் அரசியலில் அடிபடும்.
ஆனால் திமுகவில் இந்து மத நம்பிக்கையை யார் இழிவு படுத்தும் வகையில் பேசினாலும், ஒரு ஆன்மீக வாதியான துர்கா ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியாது என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் எல்லை மீறும் போது சம்பந்தப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் இடத்தில் துர்கா ஸ்டாலின் இருப்பார் என கூறப்படுகிறது.
இதனால் தான் தொடர்ந்து இந்து மத நம்பிக்கையை இழிவு படுத்தும் வகையில் பேசி வந்த திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா போன்றோர் திமுகவில் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு ஓரம் கட்டப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய சைவம் , வைணவம் குறித்து இந்த மத நம்பிக்கையை இழிவு படுத்துவது மட்டுமில்லாம், குறிப்பாக பெண்களை இழிவு படுத்தும் வகையில், மிகவும் அருவருக்க தக்க வகையில் பொன்முடி பேசிய பேச்சுக்கள் மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் பொன்முடி திமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக திடீரென முதல்வர் முக ஸ்டாலின் பெயரில் அறிக்கை வெளியானது. அதாவது எப்போதும், திமுகவில் இருந்து யாரை நீக்கினாலும், திரும்ப கட்சியில் சேர்த்தாலும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் அறிக்கை வெளியாகும், ஆனால் அமைச்சர் பொன்முடி பதவியை பறித்தது முக ஸ்டாலின் பெயரில் வெளியானது.
இந்த நிலையில் பொன்முடி இந்து மதத்தை இழிவாக பேசிய பேச்சு துர்கா ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதாகவும், இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு சென்ற துர்கா ஸ்டாலின், உடனே பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் தெரிவிக்க, அடுத்த நிமிடமே பொன்முடியின் துணை பொதுச் செயலாளர் பதவியை பறித்து அறிக்கை வெளியிட்டார் முதல்வர் முக ஸ்டாலின் என கூறப்படுகிறது.
மேலும் பொன்முடி மீது ஏற்கனவே முதல் குடும்பத்துக்கு கடும் கோபம் இருந்து வந்த நிலையில், அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட பொன்முடிக்கு சீட் கொடுக்க கூடாது என முதல் குடும்பத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், அப்படி சீட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், திமுக தோல்வி அடையக்கூடிய தொகுதி எது என்று பார்த்து பொன்முடியை போட்டியிட வைத்து அவரை அரசியலில் இருந்து அப்புற படுத்த வேண்டும் என முதல் குடும்பம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.