அண்ணாமலைக்கு பிரதமர் மோடி கொடுத்த அசைன்மெண்ட்…. முடிந்தது அதிமுகவின் சகாப்தம்..!

0
Follow on Google News

கடந்த 11ம் தேதி திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை விமானம் நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றார். பிரதமர் மோடி வரும் தினம் அன்று வானிலை மோசமாக இருக்கும் என்று ஏற்கனவே கணித்து இருந்தனர். இதனால் சாலை மார்க்கமாகவும் பிரதமர் மோடி வருவதர்க்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி மதுரை வந்து இறங்கியதும் வானிலை நன்றாக இருந்ததால் ஹெலிகாப்டரில் மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்றார், ஆனால் அவர் திண்டுக்கல்லில் இருந்து மதுரை திரும்பும் நேரத்தில் வானிலை மோசமாக இருந்தது. இதனால் சாலை வழியாக காரில் பிரதமர் திண்டுக்கல்லில் இருந்து மதுரை விமானம் நிலையம் செல்வது என முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடி திண்டுக்கல் வருகையில் கட்சி தொடர்களோடு கூட்டத்தில் ஒருவரால் பிரதமரை வரவேற்றார் பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்நிலையில் காரில் பிரதமர் செல்வது உறுதியான உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் முக்கியமான விஷயங்கள் பேச வேண்டியுள்ளது தன்னுடைய காரில் வரும்படி தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரதமர் தெரிவித்ததை தொடர்ந்து ஒரே காரில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை இருவரும் திண்டுக்கல்லில் இருந்து மதுரை விமானம் நிலையம் வரை சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் பயணம் செய்தனர்.

சமீபத்தில் குஜராத்திற்கு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய சென்ற போது அங்கே பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் காரில் குஜராத் முதல்வர் புபேந்திரபாய் பாட்டீல் ஒரே காரில் பிரதமர் மோடியுடன் செல்வதாக இருந்தது. ஆனால் ப்ரோடோகால்படி பிரதமர் உடன் வேறு யாரும் செல்ல முடியாது என்று குஜராத் முதல்வருக்கே வழங்கப்படாத அந்த மரியாதையை அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது மிக பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் அண்ணாமலை ஒரே காரில் பயணம் செய்த போது தமிழக அரசியல் குறித்து பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து வெகுவாக பாராட்டிய பிரதமர் மோடி, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகளை பாஜக தலைமையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியில் தற்பொழுது இருந்தே ஈடுபட வேண்டும் என்றும் பிரதமர் மோடி அண்ணாமலையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுகவை பெரிதாக நாம் கண்டு கொள்ள வேண்டாம், நம்முடைய தலைமையை ஏற்று அவர்கள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம். அப்படி இல்லை என்றால், அவர்களை நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்கின்ற தகவலையும் பிரதமர் மோடி அண்ணாமலையுடன் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமரின் திண்டுக்கல் பயணத்தின் போது பிரதமரை மதுரை விமான நிலையத்தில் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் திண்டுக்கல் சென்று மீண்டும் மதுரை விமான நிலையம் வரும் வரை காத்திருந்தவர்கள், பிரதமர் மோடியை 5 நிமிடம் தனியாக சந்திக்க பல முயற்சிகள் செய்தும் அதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் சென்று விட்டது.

இந்த நிலையில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்பதில் பிரதமரே உறுதி அளித்த நிலையில், அதற்கான வேலைகளில் தற்பொழுது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட தொடங்கியுள்ளார். அதிமுகவில் இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையில் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இடம் பெறுவதற்காக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் பாஜக கூட்டணியில் இடம் பெரும் ஓபிஎஸ் அணியினர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள், பாஜக தலைமை ஏற்று எடப்பாடி வந்தால் ஏற்று கொள்ளவும் பாஜக தயாராக இருக்கிறது, ஆனால் எடப்பாடி அதற்கு முன் வரமாட்டார் என்பதால் தனி சின்னம் வாங்கி தனியாக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் அதிமுக என்கின்ற கட்சி ஒரு லெட்டர் பேட் கட்சியாக சுருங்கிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.