மக்கள் மன்றம் வேண்டாம்… ஆனால் கோடி கோடியா சம்பாரிக்க ரசிகர் மன்றம் வேண்டுமாம்..! இன்னும் எத்தனை காலம் ஏமாற்ற போகிறார் ரஜினிகாந்த்.?

0
Follow on Google News

நான் அரசியலுக்கு வருவது உறுதி, “நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன் அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது; ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது” நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்கு பின் அடுத்தடுத்து படம் நடித்து கோடிகளை குவிப்பதில் பிசியாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தலைவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று களத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தனர், இந்நிலையில் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றை காரணம் கூறி அரசியல் கட்சி தொடங்குவதை கைவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டு தனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தார்.

இந்நிலையில் விரைவில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே திரைப்படம் வர இருக்கும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை,

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை.

ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். என ரஜினிகாந்த் அறிவிப்பு தனது புதிய படம் வெற்றி பெறவும், தனது கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்யவும் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு ரஜினி ரசிகர் மன்றமாக மாற்றும் யுக்தி இது, அவர் கலைப்பதாக இருந்தால் நடிகர் அஜித்தை பின்பற்றி மொத்தமாக கலைத்து விடலாமே, இன்னும் எத்தனை நாட்கள் அவரது ரசிகர்களை ஏமாற்ற போகிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.