பாஜகவுக்கு சென்று விடுகிறேன்… காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு ராகுல் காந்திக்கு கொடுத்த ஷாக்…

0
Follow on Google News

லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடைபெறும் தேர்தலுக்கு மிக குறுகிய காலமே உள்ளதால், திமுக, பாஜக, அதிமுக என மூன்று கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீட்டை விரைந்து முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்று உடன்பாடு காண்பதில் கடும் இழுபறிக்கு பின்பு தற்பொழுது உறுதி செய்யப்ட்டுள்ளது. கடந்த முறை போல் திருச்சி, விருதுநகர், ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளை காங்கிரஸ் முதலில் கேட்டு இருந்தது.

ஆனால் திருச்சி, கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று திமுகவிற்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் திருச்சி தொகுதியை கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவு செய்தது. ஆனால் காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட திருச்சி மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளுக்கு பதிலகக் தி.மு.க. புதிதாக 2 தொகுதிகளை ஒதுக்குவதாக காங்கிரஸ்க்கு உறுதி அளித்திருந்தது திமுக.

இதில் கடந்த முறை கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிட்டு வென்றார், திருச்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருநாவுகரசு போட்டியிட்டு வென்றார், அந்த வகையில் ஜோதிமணி, திருநாவுக்கரசு இருவர் தங்கள் தொகுதியை தக்க வைக்க பாஜக டெல்லி தலைமையிடம் தஞ்சம் புகுந்தனர். இதில் ஜோதிமணிக்கு பலன் கிடைக்கும் வகையில் கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

ஆனால் திருநாவுகரசு போட்டியிட்ட திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கியது திமுக. திருச்சிக்கு பதில் வேறு ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. இந்த நிலையில், திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது, அதனால் இந்த முறை திருநாவுக்கரசுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை இருக்கிறார் என்றும் உறுதியாக தெரிந்து கொண்ட திருநாவுக்கரசு, நேற்று அவசரமாக புறப்பட்டு டெல்லிக்கு பறந்துள்ளார்.

ராகுல் மற்றும் சோனியாவிடம் நெருக்கமாக இருக்கும் கேரளா முக்கியஸ்தர் ஒருவரை நெருங்கியிருக்கிறார் திருநாவுக்கரசு. அவரிடம், திருச்சி தொகுதியை எனக்கு பெற்றுத் தரவில்லை. இருந்தாலும் திருச்சி தொகுதிக்கு பதில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் பொது தொகுதிகளில் ஒன்றை எனக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். எந்த தொகுதியில் நின்றாலும் என்னால் ஜெயிக்க முடியும் என்று சொல்லியிருக்கும் திருநாவுக்கரசு.

ஒரு கட்டத்தில் டெல்லி காங்கிரஸ் தலைமை பிடி கொடுக்காமல் பதில் அளிக்க, அதற்கு திருநாவுக்கரசு எனக்கு சீட் ஒதுக்கப்படவில்லையெனில் அரசியல் ரீதியாக ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கட்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் ஒரு முடிவை நான் எடுக்க வேண்டியதிருக்கும் என தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் டெல்லி செல்வதற்கு முன்பு காங்கிரஸ் மீது தனக்கு இருக்கும் அதிருப்தி பற்றி பாஜகவுக்கு சிக்னல் கொடுத்து சென்றுள்ளார் திருநாவுகரசு என கூறப்படுகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், பாஜக திருநாவுகரசுக்கு சீட் கொடுக்க முன்வந்தால், தற்பொழுது திருச்சி காங்கிரஸ் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசு பாஜகவில் இணைந்து போட்டியிடுவார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.. தற்பொழுது சீட்டிங் எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசு எம்ஜிஆர் அமைச்சரையில் இடம்பிடித்த செல்வாக்கு மிக்க அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.