1998 மற்றும் 1999ல் நடந்த இரண்டு தேர்தலில் பாஜக வேட்பாளராக நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மாஸ்டர் மதன் என்பவர் வெற்றி பெற்று அந்த தொகுதியில் சுமார் 20 வருடத்திற்கு மும்பே தாமரை மலர்ந்து விட்டது என்பது குறிப்பிடதக்கது. மேலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர், குறிப்பிட்ட அந்த தேதியில் நாமினேஷன் கட்ட முடியவில்லை. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு சுமார் 37 ஆயிரம் வாக்கு வாங்கியது, ஆனால் அதை விட நோட்டாவுக்கு அதிக வாக்கு விழுந்தது,
இதற்கு காரணம், பாஜக நீலகிரி தொகுதியில் போட்டியிடாததால் பாஜக வாக்குகள் நோட்டாவுக்கு சென்றது. அந்த அளவுக்கு பாஜகவுக்கு மிக பெரிய செல்வாக்கு நீலகிரி தொகுதியில் உள்ளது என்பது கடந்த காலத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது. 6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் கீழே மூன்று தொகுதி மேலே மூன்று தொகுதி என பிரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய மேலே உள்ள மூன்று தொகுதிகளில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள அமைச்சர் முருகன் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அமைச்சராக மிக சிறப்பாக அங்கு பல நல திட்டங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் திமுக எம்பி ஆ ராசா அந்த பகுதி பக்கமே வரவில்லை என குமுறுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.
அந்த வகையில் நீலகிரியில் மேலே உள்ள மூன்று தொகுதிகளில், ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜகவின் வேட்பாளர்கள் எல். முருகனுக்கு மிகப்பெரிய செல்வாக்கு அந்த பகுதி மக்களிடம் உள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் இந்த மூன்று சட்டசபை தொகுதிகளில் மொத்தமும் சுமார் பெரும் 5 லட்சம் ஓட்டு தான் இருக்கும் என்றும், ஆனால் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் கீழே உள்ள மூன்று தொகுதிகளான பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவிநாசி ஆகிய இந்த மூன்று தொகுதிகளிலும் சுமார் 7 லட்சம் வாக்குகள் உள்ளது.
இந்நிலையில் மேலே உள்ள மூன்று தொகுதிகளை விட கீழே உள்ள மூன்று தொகுதிகளில் தான் வாக்குகள் அதிகமாக இருக்கிறது, இந்த கீழே உள்ள மூன்று தொகுதிகளில் மேட்டுப்பாளையத்தில் பாஜக ந;நல்ல வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் மற்ற இரண்டு சட்டமன்ற தொகுதியிலான அவிநாசி, பவானிசாகர் இது இரண்டுமே ஓரளவு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கிறது.
இப்படி ஒட்டுமொத்தமாக நீலகிரி தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதியும் பார்த்தால் சுமார் 4 சட்டசபை தொகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவாகவும், இரண்டு சட்டசபை தொகுதிகள் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆறு சட்ட மன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர் ஆ.ராசா அதற்கான செல்வாக்கு என்பது மிக குறைவாக உள்ளது. அதாவது மூன்றாவது இடத்திற்கு ஆ.ராசா தள்ளப்பட்டுவார் என்கிறது தேர்தல் களம்.
இந்த நிலையில் நீலகிரி தொகுதியில், அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், பாஜக சார்பாக மத்திய அமைச்சர் எல். முருகன், திமுக சார்பாக போட்டியிடும் இந்த தேர்தல் களர் நிலவரம் என்பது பாஜகவுக்கும் அதிமுகவுக்குமான நேரடி போட்டியாகவே நிலவி வருகிறது, இதில் ஆ ராசா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆ ராசாவின் தேர்தல் பணிகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான இரண்டாவது இடத்தை யார் தக்க வைப்பது என்ற கடும் போட்டி தான் நிலவும் சூழல் உருவாகிறது. மேலும் நீலகிரி தொகுதி மக்கள் ஜெயிக்க கூடிய வேட்பாளர், அதுவும் நம்ம தொகுதியில் ஒரு அமைச்சர் இருந்தால் இன்னும் நம்ம தொகுதி வளர்ச்சி பெரும் என்பதை உணர்ந்து, எல். முருகனுக்கு வாக்களித்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்ய தயாராகி விட்டார்கள் நீலகிரி தொகுதி மக்கள் என்று கள நிலவரம் தெரிவிக்கின்றது.