கடந்த சில நாட்களாகவே, அதிமுக – பாஜக கூட்டணி குறித்த பரபரப்பு தமிழக அரசியலில் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி – அமித்ஷா உடன் நடந்த சந்திப்பின் போது, அமித்ஷா பேசிய பேச்சை பார்த்து ஆடி போன எடப்பாடி பழனிசாமி, அதன் பின்பு திடீரென அண்ணாமலை டெல்லி சென்றது, அவரை தொடர்ந்து, செங்கோட்டையன் டெல்லி சென்றது குறித்த பல தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இரண்டு குழு உள்ளது, ஒன்று பாஜக உடன் கூட்டணி வேண்டும், மற்றொன்று பாஜக உடன் கூட்டணி வேண்டும் என்கிற இரண்டு குழு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது அதிமுக உள்ளே இருக்கும் பாஜக ஆதரவு குழுவின் கை ஓங்கி உள்ளதை தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டு, அதிமுக தலைமை பொறுப்புக்கு செங்கோட்டையனை கொன்டு வந்து அவர் தலைமையில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கான வேலையை தொடங்கியது அதிமுகவில் இருக்கும் பாஜக ஆதரவு தரப்பு.

இதனால் ஆடி போன எடப்பாடி, சரி சரி பாஜக உடன் கூட்டணிக்கு தயார் என டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தார். அங்கே அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை அதிகாரபூர்வமாக வெளியில் சென்று அறிவிக்க சொல்லி இருக்கிறார், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நெருங்கும் போது பார்த்து கொள்ளலாம் என எடப்பாடி தெரிவிக்க, அப்போதே அமித்ஷாவுக்கு எடப்பாடி மீது டவுட்.
இதற்கு, நீங்கள் கூட்டணி வாங்கனு நாள் அழைக்கவில்லை, கூட்டணி அமையும் , அது எப்படி அமையுது என்று பாருங்க என எடப்பாடியை மிரட்டும் தோரணையில் பேசி அனுப்பி வைத்த அமித்சா, உடனே தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று பதிவு செய்து இருந்தார். அதாவது அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை,பாஜக தலைமை தாங்கி நடந்தும் NDA கூட்டணி என்பதை அழுத்தமாக பதிவு செய்து இருந்தார் அமித்சா.
இந்த நிலையில் அமித்சாவை சந்தித்து வந்த அடுத்த நாளே, விஜய்யை சந்திக்க ஆள் அனுப்பி கூட்டணி குறித்து எடப்பாடி பேசிய தகவல் அமித்சா கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து, உடனே பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தததை தொடர்ந்து டெல்லி சென்ற அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்திய பாஜக டெல்லி தலைமை, அடுத்து அதிமுக மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தது.
இதனை தொடர்ந்து டெல்லி சென்ற செங்கோட்டையன் டெல்லி பாஜக தலைமையை சந்தித்து பேசிய பின்பு சில முடிவுகள் அமித்ஷா எடுத்துள்ளார், அதில் எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் முதுகில் குத்த கூடிய ஆள், நம்முடன் பேசி கொண்டே விஜய் கூட்டணிக்கு வருகிறார் என்றதும், அந்த பக்கம் தாவி விடுவார். அதனால் அதிமுகவில் இருக்கும் ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை வெளியேற்றி விட்டு செங்கோட்டையன் தலமையில் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என்று அமித்ஷாவுக்கு உறுதி அளித்துள்ள நிலையில்.
அவர்களுக்கு தேவையான உதவியை செய்கிறேன், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என அமித்சா தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அதிமுக பொதுச் செயலாளராக செங்கோட்டையனை கொண்டு வருவதற்கான வேலைகள் மிக தீவிரமாக நடந்து வருவதாகவும், அதே நேரத்தில் அண்ணாமலை தான் தமிழக பாஜக தலைவர், அதில் எந்த மாற்றமும் இல்லை. 3 சதவிகிதத்தில் இருந்த தமிழக பாஜகவை 18 சதவிகிதம் கொண்டு வந்த அண்ணாமலையை மாற்றம் செய்தால், மீண்டும் 3 சதவிகிதத்திற்கு பாஜக சென்று விடும் என்பதை நன்கு உணர்ந்த டெல்லி தலைமை அண்ணாமலை தலைமையில் வரும் 2026 தேர்தலை சந்திக்க இருப்பதில் உறுதியாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.