நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு ஆகிய இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அதாவது சந்திரபாபு தற்பொழுது ஆந்திராவில் வெற்றி பெறுவதற்கே ரஜினியின் பங்கும் உண்டு என்கிறது ஆந்திர அரசியல் வட்டாரங்கள். கடந்த வருடம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் முற்போக்கு ஆலோசனை கொண்ட சந்திரபாபு நாயுடு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என ரஜினிகாந்த புகழாரம் சூட்டி பேசி இருந்தார்.
சந்திரபாபு ஆட்சி காலத்தில்தான் ஐதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது. விஷன் 2020 என்ற பெயரில் ஒரு திட்டத்தை அமல்படுத்தி ஐதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட அவர் வித்திட்டார். விஷன் 2047 என்ற பெயரில் 2047 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் இப்போது சந்திரபாபு நாயுடு அரசியலில் பணியாற்றி வருகிறார் என்று நடிகர் ரஜினிகாந்த் ஆந்திராவில் சந்திரபாபுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமே செய்தார் என்று பேசும் அளவுக்கு பேசி இருந்தார்.
இதற்கு அங்குள்ள ஜெகன் மோகன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல் வழக்கு ஒன்றில் சந்திரபாபு நாயுடுவின் கைது செய்யப்பட்ட போது நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான லோகேஷுக்கு தைரியம் தெரிவித்தவர். என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு பெரும் போராட்ட குணம் கொண்டவர். அவர் ஒருபோதும் தவறு செய்திருக்க மாட்டார்.
அவர் இதுவரை செய்த நல்ல திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளே அவரை காப்பாற்றும். பொய் வழக்குகள், சிறைகள் அவரை ஒன்றும் செய்யாது. அவர் செய்த நல்ல பணிகளே அவரை இந்த பிரச்சினையில் இருந்து வெளியே அழைத்து வந்து விடும். நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள் என ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் சந்திரபாபுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் அந்த அளவுக்கு ரஜினி – சந்திரபாபு இடையிலான நட்பு மிக ஆழமானது.
இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி இல்லாத காரணத்தினால் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் ஆகிய இரு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.ஆனால் இந்த இரண்டு காட்சிகளை தன் பக்கம் இழுக்கும் வகையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு துணைப் பிரதமர் பதவி மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து ஆகிய சலுகைகள் கொடுக்க இருக்கிறோம் எங்க பக்கம் வாங்க என காங்கிரஸ் தரப்பில் இருந்து பேசப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்கிற குழப்பம் நீடித்து வந்த நிலையில், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு உங்க நண்பர் சந்திரபாபுவிடம் பேசுங்கள் என தெரிவிக்க, உடனே ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் சந்திரபாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், என்ன நண்பா என்ன முடிவு செய்ய போகிறீர்கள் என ரஜினி கேட்க, இதில என்ன முடிவு எடுக்க வேண்டும்.
பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விட்டோம், தேர்தலுக்கு பின்பும் பாஜக கூட்டணியில் தொடர்வோம் என தெளிவான பதிலை சந்திரபாபு ரஜினியிடம் தெரிவதாக கூறப்படுகிறது. இதன் பின்பு ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு சந்திர பாபு அவருடைய முடிவில் தெளிவாக இருக்கிறார், நீங்கள் பதவி ஏற்பதற்கான வேலையை தொடங்குகள் என தெரிவித்த ரஜினிகாந்த், மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.