தமிழக பாஜகவின் வளர்ச்சி என்பது அண்ணாமலைக்கு முன், அண்ணாமலைக்கு பின் என்று அக்கட்சியின் வரலாற்றில் எழுத வேண்டும், இதற்கு முன்பு மோடி எதிர்ப்பு, மோடி ஆதரவு என்கின்ற தமிழக அரசியல் களம் அண்ணாமலை பாஜகவின் தலைவர் ஆன பின்பு, தற்பொழுது அண்ணாமலை எதிர்ப்பு, அண்ணாமலை ஆதரவு என்று தமிழக அரசியல் களம் மாறியுள்ளது.
தமிழகத்தில் பாஜக ராச்சசன் போன்று வளர்ந்து வருகிறது என்று திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் பகிரங்கமாக மேடையில் பேசும் அளவுக்கு பாஜகவை மக்கள் மத்தியில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் அண்ணாமலை. பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற உடன் அண்ணாமலையின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்சிக்குள் அதிரடியாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக அதிரடியாக பல மாவட்ட தலைவர்களை மாற்றம் செய்த அண்ணாமலை.அதே போன்று மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு தகுந்த அங்கீகாரத்தை கொடுத்து வரும் அண்ணாமலை, அதே நேரத்தில் பல வருடம் கட்சியில் இருந்தாலும் கட்சிக்கு பலன் இல்லாமல் கட்சிக்கு பாரமாக இருப்பவர்களுக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் விஸ்வரூப வளர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பீதியை கிளப்பினாலும் கூட, பாஜகவில் இருக்கும் ஒரு சிலருக்கு அதை பொருட்படுத்த முடியவில்லை, அதனால் திட்டமிட்டு அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பாஜக டெல்லி தலைமைக்கு இங்குள்ள சிலர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் டெல்லி தலைமை அண்ணாமலைக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளது.
மேலும் அவர் மீது புகார் தெரிவிக்க வருகிறவர்களிடம். உங்களுக்கு ஒரு அருமையான தலைவரை நாங்கள் கொடுத்து விட்டோம். அவருடன் ஒன்றிணைந்து கட்சியை வளர்ப்பதற்கு வழியை பாருங்கள் அப்படி இல்லை என்றால் எந்த ஒரு இடையூறு செய்யாமல் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கையுடன் டெல்லி தலைமை சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி தன்னுடைய காரில் அண்ணாமலையை அழைத்துச் சென்றது ஏற்கனவே அண்ணாமலை வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டவர்களால் அதை ஏற்று கொள்ளமுடியவில்லை. இதனை தொடர்ந்து எதிர்க் கட்சிகள் போன்று அண்ணாமலையை குறி வைத்து ஏதாவது சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என காய் நகர்த்தி வந்துள்ளனர்.
அப்படி திட்டமிட்டு அண்ணாமலைக்கு எதிராக களத்தில் இறக்கிவிட பட்டவர் தான் காயத்ரி ரகுராம் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில் திருச்சி சூர்யா விவகாரத்தை அண்ணாமலைக்கு எதிராக திசை திருப்ப முயற்சித்த காயத்ரி ரகுராம் பின்னனியில் சிலர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து வெளியேற்ற பட்டார்.
காயத்ரி பின்னணியில் இருந்தவர்கள் மீண்டும் அவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு பல முயற்சிகளை செய்துள்ளார்கள், ஆனால் டெல்லி தலைமை தமிழக பாஜகவை பொறுத்த வரை அண்ணாமலை எடுக்கும் முடிவு தான் இறுதியானது என சொல்லிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் கூறுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலை மீது எத்தனை புகார் வந்தாலும், தமிழக பாஜகவுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணாமலை என்பதில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.