முக ஸ்டாலின் – உதயநிதி உச்சகட்ட மோதல்… ஓங்கியது கனிமொழி கை …

0
Follow on Google News

கடந்த காலங்களில் திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவருக்கும் அவருடைய மகன் முக ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் என்ன மோதல் நடைபெற்றதோ, அதே மோதல் தான் தற்பொழுது திமுக தலைவராக இருக்கும் மு க ஸ்டாலின்னுக்கும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது திமுக தலைவராக இருந்த கருணாநிதி தன்னுடைய இரண்டு மகன்கள் ஆன மு க ஸ்டாலின், மு க அழகிரி மற்றும் மகள் கனிமொழி ஆகிய அனைவருக்கும் சமமான முக்கியத்துவங்களை கட்சியில் கொடுத்து வர முயற்சித்தார். ஆனால் மு க அழகிரியின் வளர்ச்சி தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதற்காக அப்போது திமுகவில் தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கினார் மு க ஸ்டாலின்.

அப்போது கருணாநிதி தலைவராக இருக்கும்போதே மு க ஸ்டாலினுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர் முக ஸ்டாலின் ஆதரவாளர்கள். இதனால் அவ்வபோது அப்செட் ஆன கருணாநிதி தனக்கு ஓய்வே இல்லை என முக ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்த சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் தொடர்ந்து மு கருணாநிதிக்கும் அவருடைய மகன் மு க ஸ்டாலினுக்கும் சிறு சிறு உரசல்களும் இருந்து வரத்தான் செய்தது.

இருந்தாலும் தன்னுடைய அரசியல் ராஜதந்திரத்தின் மூலம் மு க அழகிரி முற்றிலும் கட்சியிலிருந்து ஓரம் கட்டி விட்டு அதிகாரத்தை கைப்பற்றிய முக ஸ்டாலின், கனிமொழியை அடுத்த கட்டத்திற்கு வளர விடாமல் பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் தற்பொழுது திமுக தலைவராகவும் முதல்வராக மு க ஸ்டாலின் இருந்து வரும் நிலையில்,

உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுகவில் இதற்கு முன்பு ஸ்டாலின் என்ன செய்தாரோ அதேபோன்று தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கி வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் வேட்பாளர் தேர்வு குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஒரு பக்கம் கனிமொழி தனக்கு டெல்லி அரசியல் வேண்டாம் மாநில அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்து, தன்னுடைய ஆதரவாளருக்கு 2026 தேர்தலில் சீட்டு வேண்டுமென்று முதல்வருக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் விருப்பத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தனக்கான ஆதரவாளர்கள் பெரும்பாலானோருக்கு வரும் சட்டசபை தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் இதனால் கடும் அப்செட்டில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் அவருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

அதே நேரத்தில் தற்போது மாநில அரசியலில் கவனம் செலுத்த களம் இறங்கிய கனிமொழியின் கை மெல்ல திமுகவில் ஓங்கி வருவதாகவும் அவருடைய ஆதரவாளர்களுக்கு நிச்சயம் முறை, எப்படியும் திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து சீட் வாங்கி தந்து விடுவார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here