சமீபகாலமாக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருவதால், முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் – உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுகவிலிருந்து பொன் முடியை முற்றிலும் முதல் குடும்பம் ஓரங்கட்டி விட்ட நிலையில், தற்பொழுது துரைமுருகனை ஓரம் கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துரைமுருகன் மீது ஏற்கனவே கனிமவள கொள்ளை குறித்த வழக்கை மீண்டும் விசாரணை செய்யது விரைவில் தீர்ப்பு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் கனிம வளம் மற்றும் மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை வலையில் துரைமுருகன் சிக்கி உள்ளார். அந்த வகையில் துரைமுருகன் மீது அமலாக்கத்துறை விசாரணையை தீவிர படுத்தினால் துரைமுருகன் கைது செய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது.

அப்படி துரைமுருகன் கைது செய்த பின்பு அவருடைய வயதை காரணம் காட்டி பெயிலில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் எப்படி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர் ஆக தொடர்ந்து, தற்போது முற்றிலும் அமைச்சர் பதவியை இழந்துள்ளது போன்று துரைமுருகனுக்கும் இது போன்ற ஒரு நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது திமுகவுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தித் தந்தது. அதே போன்று நிலை துரைமுருகன் கைது செய்யப்பட்டால், திமுக பொதுச் செயலாளர் கைது என மீண்டும் திமுகவுக்கு அவ பெயரை தான் மக்கள் மத்தியில் பெற்று தரும், மேலும் 86 வயதாகும் துரைமுருகன் வயதை காரணம் காட்டி ஓரம் கட்ட முடிவு செய்துள்ளது முதல் குடும்பம் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
ஏற்கனவே செல்வம் செழிக்கும் கனிம வள துறையை பிடுங்கி, சட்ட துறையை கொடுத்து அமைச்சரவையில் டம்மியாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளார் துரைமுருகன். மேலும் துரைமுருகனை டம்மிப் செய்யும் நோக்கில் அவருடைய பொதுச் செயலாளர் பதவியை பறிக்க திமுக முதல் குடும்ப முடிவு செய்ததாகவும், அந்த வகையில் துரைமுருகன் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை மத்த மூத்த அமைச்சர்களான ஐ பெரியசாமி, கே என் நேரு இவர்களில் யாருக்கு கொடுப்பது என்கின்ற பேச்சு வார்த்தையில்,
எதற்கு யாரோ ஒருவருக்கு கொடுத்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்து விடலாம் என்றும் கிச்சன் கேபினட் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் ஏற்கனவே குடும்ப குடும்பக் கட்சி என்கின்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது மிகக் குறுகிய வயதில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்தால் தேர்தலில் நமக்கு எதிராக திரும்பிவிடும், தேர்தல் நேரத்தில் இது போன்ற செயல் வேண்டாம், தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் கிச்சன் கேபினட்டில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவானவர்கள் உதயநிதிக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கலாம் என்று ஆதரவு தெரிவித்தாலும், அதே கிச்சன் கேபினேட்டில் இருக்கும் மற்றொரு தரப்பு முதல்வர் செய்வதுதான் சரி என்றும் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள், இதனால் முதல்வருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையிலான பிரச்சனை கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தற்பொழுது திமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறார் கனிமொழி என்றும் , உதயநிதி ஸ்டாலினை விட தான் அரசியலில் சீனியர், மேலும் நானும் இதே குடும்பத்தைச் சார்ந்தவர் தானே, அப்படி நம் குடும்பத்திற்கு வரவேண்டும் என்றால் எனக்குத் தாருங்கள் என்று தன்னுடைய அரசியல் நகர்வுகளை கனிமொழி நகர்த்தி வருவதாக கூறப்படுவதாகவும்.
மேலும் ஏற்கனவே முதல்வர் மீது அதிருப்தியில் இருக்கும் கேஎன் நேரு போன்ற இன்னும் பல திமுக மூத்த தலைவர்கள் கனிமொழிக்கு பொதுச்செயலார் பதவி கொடுப்பதுதான் சிறந்தது என கனிமொழிக்கு ஆதரவாக மூத்த தலைவர்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில் திமுகவின் முதல் குடும்பத்திலேயே அதிகார போட்டியும், பதவி போட்டியும் அதிகரித்து குடும்ப பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது