சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனங்களை குறிவைத்து நடந்த அமலாக்கத்துறை சோதனையில், தமிழகத்தையே உலுக்கும் வகையில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், அடுத்தடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சமன் அனுப்பி, விசாரணை நடத்தி, மிக குறுகிய காலத்தில் இதில் தொடபுடைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் வேலையில் மிகத் தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்த டாஸ்மாக் ஊழலில் திமுகவின் முதன்மை குடும்பத்திற்கு நேரடியாக தொடர்பு இருப்பதற்கான பல ஆதாரங்களை திரட்டி உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், முதன்மை குடும்பத்தைச் சார்ந்தவர்கள் டாஸ்மாக் அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்ட உரையாடலையும் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஒட்டுமொத்தமாக ஆடிப் போயிருக்கும் திமுகவின் முதன்மை குடும்பம், தங்களை காப்பாற்றிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி எப்படியும் முதன்மை குடும்பத்தை காட்டிக் கொடுக்க மாட்டார் என்கின்ற நம்பிக்கையில் ஒரு பக்கம் முதன்மை குடும்ப உறுப்பினர்கள் இருந்து வந்தாலும், டாஸ்மாக் அதிகாரிகளை குறிவைத்து அடுத்து விசாரணை மேற்கொள்ள இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம், டாஸ்மாக் அதிகாரிகள் எதையாவது உளறினால் கூட முதன்மை குடும்பம் மாட்டிக் கொள்ளும்.
அது மட்டும் இல்லாமல் முதன்மை குடும்பம் இந்த டாஸ்மாக் ஊழலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விட்டதாகவும். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் அதிரடி சோதனைக்குப் பின்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மேலும் முதல்வர் மு க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒவ்வொருவராக டெல்லியில் ரகசிய பயணம் மேற்கொண்டனர்.
என்ன தான் ரகசிய பயணம் மேற்கொண்டாலும், அது வெளியே கசிந்து விட்டது. இதில் செந்தில் பாலாஜி முதல்நாள் இரவு டெல்லி சென்று அடுத்த நாள் காலை வந்தது பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களை சந்திக்கத்தான் டெல்லி சென்றார்கள் என்று கூறப்பட்டாலும், பாஜகவுடன் சமரச முயற்சியில் ஈடுபடுவதற்காக தான் டெல்லி சென்றார்கள் என்றும்.
ஆனால் இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடாப்பிடியாக இருப்பதாகவும், இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமிதாஷா உறுதியாக இருப்பதால், தொடர்ந்து டெல்லி பயணம் மேற்கொண்ட முதன்மை குடும்பத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை சார் மற்றும் திமுக அமைச்சர்களின் பயணம் தோல்வியிலேயே முடிந்தது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேரடியாகவே டெல்லியில் சென்று இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் முதல்வர் ரகசியமாக டெல்லி பயணம் என்பது முடியாத காரியம். அந்த வகையில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு டெல்லி செல்ல வேண்டும் என்பதற்காக, தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதியை தமிழக முதல்வர் சந்திக்க டெல்லி பயணம் என்று தெரிவித்து விட்டு டெல்லி பயணத்தில் சம்பந்தப்பட்ட பாஜக முக்கிய புள்ளிகளை ரகசியமாக சந்தித்து இந்த டாஸ்மாக் விவகாரங்களில் தப்பிப்பதற்கான முயற்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் யார் சமாதானத்திற்கு வந்தாலும், இதில் டெல்லி தரப்பில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை சட்டப்படி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.