பொன்முடிக்கு இனி அறிவாலயத்தில் இடமில்லை… முக ஸ்டாலின் அதிரடி…

0
Follow on Google News

சர்ச்சைக்கு பெயர் போன திமுக மூத்த தலைவர் பொன்முடி, சமீபத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதம் சார்ந்து சைவம் – வைணவம் குறித்து, காதில் கேட்க முடியாத வகையில் மிக ஆபாசமாக பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமில்லை பெண்களையும் மிக கீழ்த்தரமாக பொன்முடி பேசிய பேச்சு கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.

ஏற்கனவே பொன்முடியை பொது மேடையில் வைத்து கொண்டே முதல்வர் முக ஸ்டாலின் மறைமுகமாக எச்சரித்து இருந்தார், அதாவது பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை ஓசி என்று இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசி இருந்தார் பொன்முடி, அப்போதே மேடையில் இனிமேல் இது போன்று நம்மவர்கள் யாரும் பேச கூடாது என மறைமுகமாக பொன்முடியை எச்சரித்து இருந்தார் முதல்வர் முக ஸ்டாலின்.

ஆனாலும் முதல்வர் சீரியசாக எச்சரிக்கை விடும் வகையில் பேசி கொண்டிருந்த போதே, அதே மேடையில் பொன்முடி குலுங்கி குலுங்கி சிரித்த சம்பவமும் அரங்கேறியது. இப்படி அடிக்கடி பொன்முடியால் திமுகவுக்கு அவ பெயர் வந்து கொண்டே இருந்தாலும், கருணாநிதி காலத்தில் இருந்து அமைச்சரவையில் இருக்கிறார், மூத்த அமைச்சர் என்கிற மரியாதைக்காக முதல்வர் பொறுமையாக இருந்து வந்தார்.

ஆனால் உக்கட்டமாக சமீபத்தில் சைவம் – வைணவம் குறித்து பொன்முடி பேசிய பேச்சு தமிழக அரசியல் வரலாற்றில் அநாகரிகத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிரடியாக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கிய முதல்வர் முக ஸ்டாலின், அவருடைய அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என பொன்முடிக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்.

அதாவது திமுக முக்கிய தலைவர் ஒருவரை பொன்முடி வீட்டுக்கு அனுப்பிய முதல்வர் முக ஸ்டாலின், கட்சி பதவியில் இருந்து நீக்கியது போதாது, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது, அதனால் பொன்முடியை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி, பொன்முடி வீட்டுக்கு ஆட்களை அனுப்பி பேச வைத்து இருக்கிறார்.

ஆனால் பொன்முடி அப்படி முதல்வர் அனுப்பி பேச சென்ற முக்கிய நிர்வாகியிடம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என விவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முதல்வர் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் சகோதரி செல்வி மூலம் முதல்வரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இது முதல்வருக்கு மேலும் கோபத்தை பொன்முடி மீது அதிகரித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கடந்த ஞாயிற்று கிழமை கடைசி வரை ராஜினாமா செய்யமாட்டேன் என பிடிவாதம் பிடித்து இருக்கிறார் பொன்முடி, இறுதியில் ஒரு வழியாக பொன்முடியின் ராஜினாமா கடிதம் அவர் மகன் மூலம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொன்முடியின் கட்சி பதவியை பறித்த பின்பு, அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அடுத்த சில மாதங்களில், அறிவாலயத்தில் இருக்கும் படி, திமுகவில் முக்கிய கட்சி பதவியை பொன்முடிக்கு கொடுக்கலாம் என்கிற முடிவில் இருந்து இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின், ஆனால் தற்பொழுது பொன்முடியின் செயலால் இனிமேல் அவர் அறிவாலயம் பக்கமே வராத வகையில், எந்த பொறுப்பும் கொடுக்க கூடாது என முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here